நீதிகோரிய கடையடைப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்மென காரைதீவு பிரதேச சபை அமர்வில் கோரிக்கை
(நூருல் ஹதா உமர்) காரைதீவு பிரதேச சபையின் 04ஆம் சபையின் இரண்டாவது அமர்வு இன்று (14-08) சுபாஸ்கரன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களும் பிரசன்னத்துடன் அமர்வில் கலந்து கொண்டனர். தேசிய கீதத்துடன் தொடங்கிய அமர்வில், முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவ தாக்குதலில் காணாமல் போன நிலையில் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கபில்ராஜ்க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அமர்வில் பிரதேச சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தொகையில் […]