பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அதானியின் மின் கோபுர பாகங்கள் மன்னரை வந்தடைந்தது
காற்றாலை மின் கோபுர பாகங்களை ஏற்றிய பாரிய வாகனங்கள், மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்துள்ளன. இந்த காற்றாலை மின் கோபுர பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது எனக் கோரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (3-08) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் போராட்டம் நீடித்தது. நேற்றைய தினம் (5-08) காலை மன்னார் பஜார் […]