வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது
வவுனியா நேரியகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்டிருந்த 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுத் துறையினர் மற்றும் வவுனியா குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனையை நடத்தியுள்ளனர். இதற்கமைய, […]