இலங்கைக்கு மருந்துகளை கொள்வனவு செய்ய அரசு பொறிமுறையொன்றை நிறுவ முடியாதுள்ளது
இலங்கையின் மருந்து இறக்குமதியை பல்முகப்படுத்தும் என அரசு பரவலாக அறிவித்திருந்த திட்டம், அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்து பல மாதங்கள் கடந்தும், விவாதத்தைத் தாண்டாமல் நின்று போயுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான், சீனா, இந்தோனேசியா, துருக்கி, வங்காளதேசம் போன்ற நாடுகளிலிருந்து மருந்துகள் பெறுவதற்கான முன்மொழிவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சுகாதார அமைச்சு, நீடித்து வரும் மருந்துக் குறைபாடுகளின் நடுவில்; உயிர் காக்கும் மருந்துகளைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என வலியுறுத்துகின்றது. எனினும், உள்ளகத் தகவல்களின் படி, இலங்கையின் மொத்த […]