உள்ளூர் முக்கிய செய்திகள்

மொனராகலையில் அநுரவுக்கு எதிராக விவசாயிகள் போர் கொடி

  • July 27, 2025
  • 0 Comments

மொனராகலையில் செவனகல பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் நேற்று (26-07) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், செவனகல சர்க்கரை ஆலைக்கு வழங்கிய கரும்புக்கான தொகை செலுத்தப்படாததற்கும் நிலுவையில் உள்ள பணம் வழங்கப்படாமைவிற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். அவர்களின் வலியுறுத்தலின்படி, தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஒரு டொன்னுக்கு 15,000 ரூபா வழங்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் தற்போது அந்த தொகையை 10,000 ரூபாவாக குறைக்கும் திட்டத்தில் அரசு இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த […]

உள்ளூர்

கொழும்பில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

  • July 25, 2025
  • 0 Comments

கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி காலை நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததனர். அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் சிறப்பு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலுக்கு பரப்புவதற்கு மணல் இல்லை.

  • July 24, 2025
  • 0 Comments

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு மணல் வழங்க இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு மணல் வழங்க இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சரித்திரப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, அடியவர்களின் நலனுக்காக வீதிகளில் மணல் பரப்புவது வழமையாகும் என கூறியுள்ளார். ஆனால், […]

உள்ளூர்

செம்மணி மனித புதைகுழி நாட்டின் 3வது பெரிய மனித புதைகுழியாக அடையாளம்

  • July 24, 2025
  • 0 Comments

வடக்கு மாகாணம் செம்மணி பகுதியில் 2025 மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை 85 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் நான்கு அல்லது ஐந்து வயதுடைய பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் உள்ளடங்குகின்றன. இது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கையின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக அடையாளம் பெறுகிறது. முன்னதாக மூன்றாவது பெரிய புதைகுழியாக இருந்தது மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 2023ல் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி. அங்கு 82 எலும்புக்கூடுகள் அகழப்பட்டது. செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் 18 நாட்கள் நீடித்த […]

உள்ளூர்

புத்தளத்தில் துப்பாக்கி சூடு பெண் பலி

  • July 23, 2025
  • 0 Comments

புத்தளத்தின் மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டிய பகுதியில் நேற்று (22-07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, தனது மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கியால் சூடு செய்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 30 வயதுடைய பெண் உயிரிழந்ததுடன், 10 வயதுடைய மகன் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், உயிரிழந்த பெண் முன்னதாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது

  • July 22, 2025
  • 0 Comments

வவுனியா நேரியகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்டிருந்த 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுத் துறையினர் மற்றும் வவுனியா குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனையை நடத்தியுள்ளனர். இதற்கமைய, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் உயர் பதவி அமர்த்தப்பட்டுள்ளார்

  • July 20, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் செயல்படும் முன்னணி முதலீட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த பதவியில் பணியாற்றி வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘விஸ்டம் ஓக்’ (றுளைனழஅ ழுயம) எனும் நிறுவனம் 2016இல் நிறுவப்பட்டதுடன், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை நிர்வகித்து வருகின்றதாக சமூக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அர்ஜுன் மகேந்திரன், […]

உள்ளூர்

வவுனியாவில் ஒருவரின் மரணத்தையடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பில் மேலும் 5 பேர் கைது

  • July 19, 2025
  • 0 Comments

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில், மேலும் ஐந்து பேர் நேற்று (18-07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். அன்றைய இரவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியில் விழுந்து உயிரிழந்த நிலையில், அந்த மரணத்திற்கு பொலிசார் காரணம் எனக் கூறிய குழுவினர் குழப்பத்தை ஏற்படுத்தி, பொலிசாரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைக்காக அங்கு சென்ற பொலிசாரை அப்பகுதியிலிருந்த மக்கள் தாக்கியதுடன், அந்த சம்பவத்தில் […]

உள்ளூர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்

  • July 19, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடு 4 முதல் 5 வயது சிறுமியினுடையது என சந்தேகம்

  • July 16, 2025
  • 0 Comments

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வு வழக்கு நேற்று (15-07) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில், நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தினார். அகழ்வுப் பணியின் இரண்டாம் கட்டம் தொடர்பான தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையும், சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் நீதிமன்றத்திற்கு […]