உலகம்

அமெரிக்கா ரஷ்யாவின் இரு முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தடை விதித்தது

  • October 23, 2025
  • 0 Comments

உக்ரைனில் உடனடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நோக்கில், அமெரிக்க நிதித்துறை (U.S. Treasury Department) ரஷ்யாவின் மிகப் பெரிய இரு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான Rosneft மற்றும்  Lukoil மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. ‘இப்போது கொலைகளை நிறுத்தி உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது,’ என அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெஸ்சென்ட் (Scott Bessent) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். பெஸ்சென்ட் கூறியதாவது: ‘அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தேவையானால் மேலும் நடவடிக்கைகளை எடுக்கத் தயார் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பொலிஸாரின் இடையூறுகளுக்கிடையிலும் திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின்; போராட்டம் நாளையும் தொடரும்.

  • September 18, 2025
  • 0 Comments

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று இரண்டாவது நாளாகவும் பொலிஸாரின் இடையூறுகளுக்கு மத்தியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ‘விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு’, ‘இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிராக போராடுவோம்’ எனும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, நாளை (19-09) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதே இடத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் […]

உள்ளூர்

நல்லாட்சி அரசாங்கம் இணங்கிய 2015 ஜெனீவா தீர்மானத்திலிருந்த வெளிநாட்டு நீதிபதிகள் என்பது நீக்கப்பட்டுள்ளது.

  • September 17, 2025
  • 0 Comments

இலங்கை தொடர்பான சமீபத்திய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் உயர் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆதரித்த தீர்மானத்தில், எந்தவொரு பொறுப்புகூறல் செயல்முறைக்கும் நம்பகத்தன்மை ஏற்படுத்த சர்வதேச பங்கேற்பு அவசியம் என வெளிப்படையாக வலியுறுத்தப்பட்டிருந்தது. அதில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறும் கலப்பு போர் குற்ற விசாரணை அமைப்பை அமைக்க நல்லாட்சி அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா இணைந்துகொண்டிருந்தமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இல்ரேலுக்கு சென்ற இலங்கை ஊடகவியலாளர்களை அரசு அனுப்பவில்லையென கௌசல்யா அரியரத்ன எம்பி தெரிவித்துள்ளார்

  • September 11, 2025
  • 0 Comments

எந்தவொரு பொதுப்பணியாளரும் தனிப்பட்ட காரணத்துக்காக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள முடியும், எனவும் ஆனால் அதற்காக முறையான விடுமுறையை பெற்றிருக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கௌசல்யா அரியரத்னே, செவ்வாய்க்கிழமை (09-09) பாராளுமன்றத்தில், தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பிகர் உறுப்பினர் முஜிபுர் ர{ஹமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 16 இலங்கை ஊடகவியலாளர்கள் இஸ்ரேலில் பயணம் செய்திருந்ததைப் பற்றிப் ; முஜிபுர் ர{ஹமான் கேள்வியெழுப்பினாhர் ர{ஹமான் கூறியதாவது, இரு ஊடகவியலாளர்கள்; […]

உள்ளூர்

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வீட்டிலிருந்து உணவு அனுமதி

  • September 1, 2025
  • 0 Comments

விளக்கமறியலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் ரஜித சேனரத்னையும் நிமல் லன்சாவையும், அவர்கள் வீட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளை பெற்றுக்கொள்ள சிறைச்சாலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சிறைச்சாலைத்துறை பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்ததாவது, இருவரும் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டதாகும். ரஜித சேனரத்ன அரசு நிதிக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் வருகிற செப்டம்பர் 9 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், 2006 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் […]

உள்ளூர்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இன்று மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • August 28, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக இன்று ஆறு எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று நான்காவது நாளாக தொடர்ந்தது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி இரண்டாம் கட்ட அகழ்வு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

‘நீதியின் ஓலம்’ எனும் கையெழுத்துப் போராட்டம் நிறைவுற்றது.

  • August 28, 2025
  • 0 Comments

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பங்களுடன் ‘நீதியின் ஓலம்’ எனும் போராட்டம் நிறைவுற்றது. இந்த கையொப்பங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் அனுப்பவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கு இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார். ‘நீதியின் ஓலம்’ எனும் கையொப்பப் போராட்டம், ஒன்பது முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 23 ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்தின் பிரதான நிகழ்வு, தமிழர் படுகொலையின் சாட்சியிடமாகிய யாழ்ப்பாணம் செம்மணியில் தொடங்கி, வியாழக்கிழமை முற்பகல் […]

இந்தியா முக்கிய செய்திகள்

த.வெ.க.வின் இரண்டாவது மாநாட்டிற்கு வந்த தொண்டர்களால் மதுரையே அதிர்ந்தது

  • August 21, 2025
  • 0 Comments

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநாடு இன்று மாலை மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தியில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர் என எதிர்பார்க்கப்படுவதால்இ கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தில் இதுவரை எந்தக் கட்சியும் இத்தகைய பரந்த பரப்பளவிலான மைதானத்தில் மாநாடு நடத்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ள திடலில்இ 250 ஏக்கர் மாநாட்டிற்காக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பு ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து நெரிசல்

  • August 15, 2025
  • 0 Comments

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்தும், கொழும்பு பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை பொது மயானத்திலிருந்து பொரளை சந்தி நோக்கி செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் 6 பேரூம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

  • August 12, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் உரிமைகளை ரத்து செய்யும் அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரேணுகா பெரேரா தாக்கல் செய்துள்ளார். இதில், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். மனுதாரர் தனது மனுவில், கடந்த 7ஆம் திகதி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைத்ததாகவும், அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டரீதியாக ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்மொழியப்பட்ட […]