இந்தியா உலகம்

தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

  • March 23, 2025
  • 0 Comments

  சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த […]

உள்ளூர்

கிளிநொச்சி பரந்தன் வீடொன்றில் கெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்பு மூவர் கைது

  • March 22, 2025
  • 0 Comments

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கேரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 20.7 கிராம் ஐஸ் மற்றும் 5கிறாம் 75மில்லிக்கிறாம் கெறோயின் என்பன கிளிநொச்சி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது அத்துடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர். கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ள

இந்தியா

விடுதலை சிறுத்தைகளின் பெனரை கிழித்ததால் வீதியின் குறுக்கே காரை நிறுத்தி வி.சி.க.வினர் வீதி மறியல்

  • March 22, 2025
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைவிட்டனர்.  

உள்ளூர்

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

  • March 21, 2025
  • 0 Comments

பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முகவரிகளுக்கான பொதிகள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தை வந்தடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 20 பொதிகள் வந்துள்ளன. அவை உரிமை கோரப்படாததால், பொதிகளை பரிசோதிக்க 19 ஆம் திகதி தபால் மா அதிபரிடம் அனுமதி பெறப்பட்டது. பரிசோதனையின் போது 14 பொதிகளில் 272 கிராம் கஞ்சா போதைப் பொருளும், 2,049 […]

உள்ளூர்

தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு தான் எதிரானவன் அல்லவென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

  • March 21, 2025
  • 0 Comments

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகளிற்கு அளித்த வாக்குறுதியை வழங்குங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாணசபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் என தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையை இந்த விவகாரங்களிற்காக சர்வதேச […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவு சட்டவிரோதமானதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு

  • March 19, 2025
  • 0 Comments

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்க அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த தடுப்பு உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த அடிப்படை மனித உரிமை மீறலுக்காக அரசாங்கம் மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவினால் […]

உலகம்

அமெரிக்க மற்றும் ரஸ்சிய ஜனாதிபதிகள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை

  • March 17, 2025
  • 0 Comments

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ந்து நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சி சர்வதேச அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது. முன்னதாக சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 30 நாட்கள் போர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து மூவர் காயம்

  • March 17, 2025
  • 0 Comments

கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்று (16-03) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி முகமாலை இந்திராபுரம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனம் என்பன மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பளை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

கட்டுரை

யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும்

  • March 16, 2025
  • 0 Comments

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-அநனழைஉசநள- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக […]

உலகம்

ஏமனின் ஹவுதிகள் மீது அமெரிக்கா நடத்திய கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு

  • March 16, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிராக நடத்திய முதல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஹவுதி அமைப்புக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் போது, ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மற்றும் செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது. இஸ்ரேலுக்கு எதிரான செயல்களை […]