நாட்டில் சுகாதார சீர்கேட்டால் சிசு மரண வீதம்,எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு- கபில ஜயரத்தன
இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளது. வருடம் தோறும் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழந்து வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் கபில ஜயரத்தன தெரிவித்தார். இலங்கை மருத்துவ சங்கத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது. இதன்போது வைத்தியர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ள அதே வேளை வருடாந்தம் […]