முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற எம்பிகளுக்கான உணவு விலையை 450 இருந்து 2000 ரூபாவாக உயர்த்த தீர்மானம்

  • January 24, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற பராமரிப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின்படி, எம்.பியொருவரின் காலை உணவிற்கு 600 ரூபாவும், மதிய உணவிற்கு 1300 ரூபாவும், மாலை தேநீருக்கு 100 ரூபாவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பராமரிப்புக் குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னய […]

இந்தியா

சீமானுக்கு எதிராக போராடிவர்களில் 878 பேர் மீது வழக்குப் பதிவு

  • January 23, 2025
  • 0 Comments

தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஸ்ணன் தெரிவித்து இருந்தார். இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே அறிவித்தப்படி சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு கிராமங்களான தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் இரண்டும் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

  • January 21, 2025
  • 0 Comments

இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகைக்கள் இருக்கும் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமக்களை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அவர்; இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம்ஆகியகிராமங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படவில்லை. தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தஇடங்களில் […]

உலகம்

அமெரிக்கவுக்கு இன்று விடுதலை நாள்- புதிய ஜனாதிபதி டிரம்ப்

  • January 21, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இதன்பின்னர் பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், ஜனவரி 20-ஆம் தேதி தான் அமெரிக்கவுக்கு விடுதலை நாள். அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பமாகியுள்ளது .உலகம் மதிக்கப்படும் அமெரிக்கா மாறும். இதுவரை இல்லாத அமெரிக்காவைக் கட்டமைப்பேன் என்னுடைய உயிர் ஒரு காரணத்திற்காகவே காக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவதற்காகவே கடவுள் என்னுடைய உயிரை காப்பாற்றியுள்ளார்.’ என்றார். எனது வெற்றி அமெரிக்கா முழுமைக்கும் ஆனது. அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். அமெரிக்காவுக்கே முதலில் முன்னுரிமை என்பதைச் செயல்படுத்துவேன். […]

முக்கிய செய்திகள்

யாழில் தமிழ்மொழி 3வது இடத்தில் இருப்பதால் அதிர்ச்சியுற்றேன் – அமைச்சர் சந்திரசேகரன்

  • January 20, 2025
  • 0 Comments

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் […]

இந்தியா

நடிகர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் காந்தி மீது வைக்குமாறு அண்ணாமலை தெரிவிப்பு

  • January 19, 2025
  • 0 Comments

மதுரையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: த.வெ.க. தலைவர் விஜய்யை சமீபத்தில்திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார். தற்போது செல்வப்பெருந்தகை இந்தியா கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை. பா.ஜ.க. யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என எதிர்வுகூறப்பட்டுள்ளது

  • January 18, 2025
  • 0 Comments

இன்று தொடக்கம் அதாவது (18-01-2025) ஆம் தேதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும், குறிப்பாக கிழக்கு, வட-மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு தாழ்வு பகுதிகளிலும் இன்னும் தீவிரமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் . மேலும், அடுத்த சில நாட்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும். அனைவரும் இதில் கவனம் செலுத்துமாறு நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை நீர்ப்பாசன இயக்குநரகம் சூரியபண்டார வேண்டகோள் […]

முக்கிய செய்திகள்

டிக் டொக் செயலிக்கான அமெரிக்க தடையானது உறுதி செய்யப்பட்டுள்ளது

  • January 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது ‘டிக் டொக்’ எனப்படும், கைப்பேசி செயலி உலகளாவிய ரீதியில் பிரபலமானது. இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால் வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்தி வருகின்றனர் சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்திய அரசு […]

முக்கிய செய்திகள்

இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

  • January 17, 2025
  • 0 Comments

ரஸ்சியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொடை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (17-01-2025) உத்தரவிட்டுள்ளார். உதயங்க வீரதுங்க 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உதயங்க வீரதுங்க கடந்த வெள்ளிக்கிழமை (10) மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்கள் மாயம்!

  • January 15, 2025
  • 0 Comments

கடந்த காலகட்டத்தில் மாகாண சபைகளுக்குச் சொந்தமான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல் போன வாகனங்களில் பல சொகுசு கார்கள் மற்றும் ஜீப் வண்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி மாகாண சபைகளின் பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களே அவ்வப்போது காணாமல் போயுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அந்த வாகனங்கள் குறித்த தகவல்களைக் கண்டறிய […]