உள்ளூர்

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்!

  • January 15, 2025
  • 0 Comments

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி, பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமத்துடன் 24 சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளன. அத்துடன் இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் […]

முக்கிய செய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

  • January 14, 2025
  • 0 Comments

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார் மேலும் டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு […]

முக்கிய செய்திகள்

வீட்டில் பொங்காமல் மனதுக்குள் பொங்கியழுத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

  • January 14, 2025
  • 0 Comments

அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராக உள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொங்கல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வடக்கு கிழக்கில் […]

முக்கிய செய்திகள்

யோகாசன பயிற்சி செய்துகொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

  • January 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இவர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை (11) உயிரிழந்தார்.

முக்கிய செய்திகள்

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

  • January 12, 2025
  • 0 Comments

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி.அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.    

உள்ளூர் முக்கிய செய்திகள்

அம்பாறை பொலிஸ் நிலையமொன்றில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்!

  • January 9, 2025
  • 0 Comments

கல்முனை பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் யுவதி ஒருவர் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கோடிஸ்வரன், எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கச் சென்ற பெண் ஒருவரும், அவரது உறவினர்களும் கடுமமையாக தாக்கப்பட்டதாகவும் இந்த விடயம் மிகவும் மோசமான செயல் எனவும் நாடாளுமன்ற அமர்வில் கோடிஸ்வரன், எம்.பி இடித்துரைத்துள்ளார். இந்த அரசாங்கத்தில் தூய்மையான சிறிலங்கா எனும் திட்டங்கள் எல்லாம் நடைமுறைப்படுத்துகின்றது ஆனால், இவ்வாறான செயல்கள் இடம் பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை […]

முக்கிய செய்திகள்

ஐ.எம்.எப்பின் அனுமதியுடன் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படவுள்ளது

  • January 9, 2025
  • 0 Comments

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளாhர்  

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் இடியன் துப்பாக்கியால் அத்தானை சுட்டார் மச்சான்

  • January 9, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமுற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் நேற்று (08) இரவு நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு கைக்கலப்பாக மாறியுள்ளது. அதனையடுத்து, கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார். அது பலனளிக்காத நிலையில் இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவரை […]

உள்ளூர்

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது- யாழ் வணிகர் கழகம்

  • January 2, 2025
  • 0 Comments

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது அதில் எவ்வித சிக்கலும் இல்லை. இறக்குமதி அரிசியிலேயே தற்போது பிரச்சனை நிலவுகின்றது என யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். உள்ளூர் வெளியூர் அரிசிகளின் விலை மற்றும் தொடர்பிலான ஊடக சந்திப்பு யாழ் வணிகர் கழகத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் தற்போது அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலை […]

உள்ளூர்

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலன் குறித்து முக்கிய முடிவு

  • December 28, 2024
  • 0 Comments

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் குடும்பங்களின் நலன்கள் குறித்து நிவர்த்தி செய்யும் குழுவின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை அடையாளம் காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும், பூர்த்தி செய்யப்படாத […]