இந்தியா

எங்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது-ஜெய்சங்கர்!

  • December 23, 2024
  • 0 Comments

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திர சேக ரேந்திர சரஸ்வதி தேசிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. இதில் பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். சுதந்திரத்தை நடுநிலைமையோடு ஒருபோதும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எங்களின் தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதைச் செய்வோம். தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகள் மேல் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது. […]

உள்ளூர்

யாழில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்!

  • December 19, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன்போது, மாவட்டச் செயலகத்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, தரம் 9 மற்றும் தரம் 9க்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி நிலைய மற்றும் குழு வகுப்பு செயற்பாடுகளை மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்காகவும், அறநெறிசார் செயற்பாடுகளுக்காகவும், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் […]

உலகம்

கனடாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சஸ்கட்ச்வான் முதல்வர் கோரிக்கை

  • December 13, 2024
  • 0 Comments

கனடிய மக்களின் உற்பத்திகள் மீது வரி விதிப்பது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார். கனடாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்பது குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். ட்ரம்ப் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய ஓர் அரசாங்கம் நியமிக்கப்படுவது பொருத்தமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். கனடியர்கள் தங்களது தெரிவினை மேற்கொள்ளக்கூடிய ஒர் வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனவும் இதற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் ஸ்கொட் மோ மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர்

யாழில் பரவும் மர்மக் காய்ச்சல் குறித்து தகவல் வெளியிட்ட யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.

  • December 12, 2024
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண […]

உள்ளூர்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று!

  • December 3, 2024
  • 0 Comments

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடியுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பாராளுமன்றம் […]

உலகம்

உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது- ஐ.நா அறிக்கை.

  • November 26, 2024
  • 0 Comments

இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் அவர்களது சொந்த குடும்பத்தினரோ, உறவினரோ அல்லது தெரிந்தவராகவரோ இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். இந்நிலையில் கடந்த 2023 ஆண்டில் மட்டுமே உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான […]

உள்ளூர்

அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி அநுர

  • November 12, 2024
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. குறித்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டதாகவும் ஊடகங்களும் […]

சினிமா

கரங்களை விரித்தும் இதயத்தை திறந்தும் வைத்து காத்திருக்கின்றேன்- விஜய் கடிதம்.

  • October 25, 2024
  • 0 Comments

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. […]

உள்ளூர் வணிகம்

யாழ் வணிகர் கழக ஆண்களுக்கு பெண்கள் வகுப்பெடுத்தார்கள்

  • October 18, 2024
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உறுப்பினர்களுடன் நேற்று; கலந்துரையாடினர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் ஆகியோரே யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் உட்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். தேர்தலில் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டது. இதில் கட்சி ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் ஈஸ்வரன், […]

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

  • October 12, 2024
  • 0 Comments

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த நிலையில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 144 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணியளவில் புறப்பட்டது. வழக்கமாக விமானம் தரையிலிருந்து மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே […]