உள்ளூர்

இலங்கையின் முதலாவது பணக்காரனாக இஸாரா நாணயக்கார முதலிடத்தைப் பிடித்துள்ளார்

  • August 10, 2025
  • 0 Comments

கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் இஸாரா நாணயக்கார இலங்கையின் முதல்நிலை செல்வந்தராகத் திகழ்கிறார். இதன் மூலம், அவர் தம்மிக்க பெரேராவை முந்தி நாட்டின் பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலில், இந்திய தொழிலதிபர் முகேஸ் அம்பானி 118 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் பிராந்தியத்தின் மிகப்பெரிய செல்வந்தராக இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தானின் ஸாஹித் கான் 13.5 பில்லியன், […]

உள்ளூர்

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காணுமாறு கோரிக்கை

  • August 10, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர், சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடைபெற்று வரும் வழக்கு இலக்கம் யுசுஃ804ஃ23-இன் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த புதைகுழி 1994 முதல் 1996 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காணாமல் போனோர் அலுவலகம், 2016ஆம் ஆண்டின் […]

உள்ளூர்

சோமரத்ன ராஜபக்ஸவின் உயிருக்கு ஆபத்தென்கிறார் அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஸ

  • August 6, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாக, கிருஸாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபகஸ் தெரிவித்துள்ளார். இதனை அவரது மனைவி எஸ்.சி. விஜேவிக்ரம, ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   அக்கடிதத்தில், யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட சித்திரவதைக்கூடங்கள் […]

உள்ளூர்

ஐநாவுக்கு அனுப்பி கடிதத்தில் 115 தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் 11 மதத்தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளனர்

  • August 5, 2025
  • 0 Comments

செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைய, உரிய கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் நடைபெற வேண்டும் எனவும், மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் உறுப்புநாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதத்தில், வடகிழக்கு மாகாணங்களில் இயங்கும் தமிழ் கட்சிகள் மற்றும் 115 சிவில் அமைப்புகளுடன், 11 மதத்தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். செப்டெம்பர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதற்கான சாட்சி – அருட்தந்தை மா.சத்திவேல்

  • July 29, 2025
  • 0 Comments

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை பார்த்தறிந்துள்ளனர்

  • July 29, 2025
  • 0 Comments

இலங்கையின் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள்இ கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்இ இளைஞர் அணி தலைவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்தியாவின் டெல்லிஇ பீகார்இ கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இக்குழுஇ அபிவிருத்தி திட்டங்கள்இ பொருளாதார நவீனத்துவம்இ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்இ ஜனநாயக பாரம்பரியம் மற்றும் கலாசார […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசு நிவாரணங்களுக்குப் பதிலாக நாளுக்கு நாள் வரிகளை அதிகரிக்கிறதென காவிந்த ஜயவர்த்ன தெரிவிப்பு

  • July 15, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வரி அதிகரிப்பு தொடர்பிலே அனைவரும் கதைக்கின்றனர், ஆனால் அரசாங்கம் மக்களுக்கு அதிகரித்துவரும் வரிகள் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது நாளுக்கு நாள் வரி அதிகரித்து வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அமெரிக்க வரிவிதிப்பு இலங்கையின் பொருளாதார நரம்பில் நீளும் அழுத்தம்

  • July 13, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசு, சமீபத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு மேலதிக வரிவிதிப்பை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் தாக்கம் உலக வணிகத்தில் அதிர்வெண்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இலங்கையின் சில முக்கிய ஏற்றுமதி பொருட்கள் – குறிப்பாக ஆடைத் தயாரிப்புகள், தேயிலை, ரப்பர் சார்ந்த பொருட்கள் என்பவை இதில் இடம் பெற்றுள்ளன. இதை ஒரு சாதாரண வரித்தீர்மானமாக எண்ணுதல் தவறானதாகும் ஏனெனில் அமெரிக்கா இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தை. அதிலும் குறிப்பாக ஆடைத் […]

உள்ளூர்

இலங்கையின் கல்விதுறையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மாற்றங்கள் ஆரம்பமென பிரதமர் தெரிவிப்பு

  • July 13, 2025
  • 0 Comments

இந்த மாற்றங்கள் 2026ஆம் ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளன. பிற வகுப்புகளுக்கு பின்னர் நீட்டிக்கப்படும். இந்த புதிய திட்டம் தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இது மாணவர்களை நவீன உலகில் வாழத் தயார்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவும் திறமையும் கொண்ட குடிமக்களாக வளர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் பங்களிக்கவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் […]

உள்ளூர்

இலங்கைக்கு அமெரிக்கா வரியை 30 வீதமாக அதிகரித்தது

  • July 10, 2025
  • 0 Comments

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. முன்னதாக இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 வீத வரி விதித்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக 2 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதன் பின்னர் 44 வீதமாக அறிவித்திருந்தார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு […]