உள்ளூர்

கச்சத்தீவு மீட்பு என்பது தமிழக அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதி மட்டுமே!

  • June 29, 2025
  • 0 Comments

கச்சத்தீவு இலங்கைக்கு இராஜதந்திர ரீதியாக சொந்தமானது என்பதால், அது எந்த வகையிலும் வேறு எந்த தரப்பினருக்கும் ஒப்படைக்கப்படாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் காலங்களில் தமிழக அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும், அரசியல் வாக்குறுதியாகவும் மக்களை சூடேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் தேர்தல் வாக்குறுதியாகவே கச்சத்தீவு மீட்பு என்ற விடயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் இந்திய மீனவர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக, அந்தப் பகுதியில் […]

இந்தியா

அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு

  • June 26, 2025
  • 0 Comments

ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் கடந்த 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும் விடுதி மற்றும் அதன் அருகில் இருந்வர்கள் 29 பேரும் உயிரிழந்தனர். ஜூன் 13ஆம் தேதி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. கருப்புப் பெட்டி கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், தரவுகளை டவுன்லோடு செய்ய வெளிநாட்டிற்கு […]

உலகம் முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் பலி, 400 பேர் காயமென காசா தெரிவித்துள்ளது.

  • June 26, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் காசா மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் உயிரிழந்து, சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பல மரணங்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் பலியானவர்களின் பிணங்களை குடும்பத்தினர் எடுத்து செல்லும் போது ஏற்பட்ட அவலக் காட்சிகள் உலகை உலுக்கியன. இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெற்ற போர் நடவடிக்கையில் இதுவரை 56,156 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், […]

உள்ளூர்

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் முன்னாள் இந்நாள் எம்பிக்களை சந்தித்தார்

  • June 26, 2025
  • 0 Comments

யாழ். விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை நேற்றரவு (25-06) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தொடர்பில் டிரம்ப் ஒன்றும் அமெரிக்க ஊடகங்கள் மற்றொன்றும் சொல்கின்றன

  • June 25, 2025
  • 0 Comments

அமெரிக்கா கடந்த வாரம் ஈரானின் அணு உள்கட்டமைப்புகளின் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் மூலம் அந்த மையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ‘ஈரானின் அணுத் திட்டம் மீண்டும் இயங்கவே இயலாத வகையில் அழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேறு யாரும் சந்தேகிக்க வேண்டியதில்லை’ என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் பென்டகனின் பாதுகாப்பு உளவுத்துறை (Defense Intelligence Agency – DIA) தயாரித்த மதிப்பீட்டை மேற்கோளாகக் கொண்டு தாக்குதல்களால் ஈரானின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணியில் அமைச்சர் சந்திரசேகரனின் வாகனம் மீதும் ரஜீவன் எம்.பி. மீதும் தாக்குதல்

  • June 25, 2025
  • 0 Comments

யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர். இன்று மதியம் ஒரு மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர். இதன்பொழுது போராட்டகாரர்களால் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டதுடன் அவரது வாகனத்தின் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விரைவாக அவ்விடத்தை விட்டு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யுத்த வடுக்களின் காயங்கள் ஆற காலங்கள் தேவையென ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

  • June 25, 2025
  • 0 Comments

பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆறுவதற்கு சில காலம் தேவை. இருப்பினும் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களை நேற்று (24-06) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈரான் இஸ்ரேல் மோதலின் இலக்கு என்ன? ஆட்சியை கவிழ்ப்பதா அணுசக்தியை அழிப்பதா?

  • June 14, 2025
  • 0 Comments

இரானின் அணுசக்தி மூலம் இஸ்ரேலுக்கு கடுமையான ஆபத்து உள்ளது என்று இஸ்ரேல் கருதுகிறது. அதனை அழிப்பதே வெள்ளிக்கிழமை தான் நடத்திய தாக்குதல்களின் முக்கிய குறிக்கோள் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பெரிய இலக்கைக் கொண்டுள்ளார். இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அந்த பெரிய இலக்கு. இதற்கு முன்பு இல்லாத வகையில் தாக்குதல் நடத்துவதன் மூலம், ஒரு சங்கிலித் தொடர் போன்ற எதிர்வினையை ஏற்படுத்தலாம் என்றும் இதனால் ஏற்படும் அமைதியின்மை இறுதியில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ் அரசியல்வாதிகள் வயிறு வளர்ப்பதனையே நோக்கமாக கொண்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

  • June 14, 2025
  • 0 Comments

அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லாதவர்கள். இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா ஏ9 வீதியில் 1306 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கொட்டகை முன்னால் இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், ‘போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் […]

உள்ளூர்

வடக்கில் 10 பொலிஸ் நிலையங்களை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதா?

  • June 14, 2025
  • 0 Comments

வடக்கில் சுமார் 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இனந்தெரியாத நபர் தொலைபேசி அழைப்பொன்றை விடுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணி வரை வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸாhர் விசாரணைகள் ஆரம்பித்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் […]