உள்ளூர்

நாட்டில் அத்தியாவசிய மருந்து வகைகள் பற்றாக்குறையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

  • June 14, 2025
  • 0 Comments

மத்திய மருந்து சேமிப்பு மையங்களில், சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், மருத்துவமனைகளுக்குள், சுமார் 50 வகையான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த பல […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

  • June 14, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்றிரவு (13-06) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர்

சில ஊடகங்கள் ஊடக சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதாக நீதியமைச்சர் குற்றச்சாட்டு

  • June 4, 2025
  • 0 Comments

நீங்கள் என்ன சொன்னாலும் எவ்வளவு பிழையான விடயங்களை தெரிவித்தாலும் உங்கள் சகோதரருக்கு பொதுமன்னிப்பு கிடைக்காது என ஊடகமொன்றிற்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார் இலங்கையின் ஊடகமொன்று தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலிற்காக ஊடக சுதந்திரத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார இது குறித்து எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் சில ஊடகங்கள் ஊடகசுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்கின்றன என குறிப்பிட்டுள்ளார். நீங்கள் என்ன சொல்லாலும் உங்கள் சகோதரருக்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழகத்திலிருந்து 37 வருடங்களின் பின் தாயகம் திரும்பியவருக்கு பிணை

  • June 2, 2025
  • 0 Comments

37 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியவேளை அவர் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட நபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், குறித்த நபர் இன்றையதினம் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இந்தியா உள்ளூர் சினிமா

‘மதயானை கூட்டம்’, ‘ராவண கோட்டம்’ படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

  • June 2, 2025
  • 0 Comments

‘மதயானை கூட்டம்’, ‘ராவண கோட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 1999 முதல் 2000 வரை வெளியான ‘கதை நேரம்’ மற்றும் 56 குறும்படங்கள், ‘ஜூலி கணபதி’ திரைப்படம் போன்றவற்றில் பாலு மகேந்திராவிடம் பணிபுரிந்தார். மேலும் ‘பொல்லாதவன்’, ‘கொடிவீரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவுப் பேருந்து ஏறும் […]

உள்ளூர்

பேரவையும் சங்கும் சங்கமம், புதிய கூட்டணி ஒப்பந்தம்

  • June 2, 2025
  • 0 Comments

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர். ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தெற்கு கடல் பகுதியில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி

  • May 29, 2025
  • 0 Comments

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில், 02 நெடுநாள் மீன்பிடி படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து 600 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தெற்கு பிராந்தியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதன்போது 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

புதிய கொவிட் திரிபை அரசாங்கம் கவனமாக அவதானித்து வருகிறதென அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்

  • May 27, 2025
  • 0 Comments

அண்டைய நாடான இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் புதிய கொவிட் 19 திரிபின் தோற்றத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் கொரானா தொற்று அதிகரித்து […]

உள்ளூர்

நியூஸிலாந்துடன் வர்த்தக பொருளாதார உறவை வலுப்படுத்த முயற்சி- விஜித்த ஹேரத்

  • May 27, 2025
  • 0 Comments

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான நல்லுறவினை துடிப்பானதும், பன்முகத்தன்மை வாய்ந்ததுமான கூட்டாண்மையாக மாற்றியமைப்பதை இலக்காகக்கொண்டு நியூஸிலாந்து அரசுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்திருக்கும் நியூஸிலாந்தின் பிரதி பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீற்றர்ஸுக்கும், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பை அடுத்து, நேற்று (26-05) வெளிவிவகார அமைச்சில் அவர்களது கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஆலோசனை

  • May 26, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு […]