முக்கிய செய்திகள்

இந்தியாவில் பதற்றம் 18 விமான நிலையங்கள் மூடல் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

  • May 7, 2025
  • 0 Comments

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பதற்றத்தை தொடர்ந்து வட இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ் மற்றும் சண்டிகர் உட்பட குறைந்தது 18 விமான நிலையங்கள் இன்று (புதன்கிழமை) […]

இந்தியா முக்கிய செய்திகள்

பாக்கிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் காணொலியை இந்திய வெளியிட்டுள்ளது

  • May 7, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஸஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் […]

உள்ளூர்

மட்டக்களப்பில் குடிமனையில் 6 அடி முதலை புகுந்ததால் பரபரப்பு

  • May 7, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டம், சின்ன ஊறணி பிரதேசத்தில் அமைந்துள்ள குடிமனை பகுதியில் இன்று அதிகாலை 6 அடி நீளமுடைய முதலை ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. விழிப்புடன் இருந்த பிரதேச மக்கள் குறித்த முதலை மீது கட்டுப்பாடுடன் நடவடிக்கை எடுத்து அதை பாதுகாப்பாக மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்கள் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்தை தொடர்புகொண்டு முதலையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அண்மைக்காலமாக மட்டக்களப்பில் குடிமனைப் பகுதிகளுக்குள் முதலைகள் புகுந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் தீவிரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டமானது .

  • May 7, 2025
  • 0 Comments

காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ந்தேதி நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள், ஒரு நேபாள நாட்டுக்காரர் என 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதை உறுதி செய்த இந்தியா நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று அறிவித்தது. பிரதமர் மோடி பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் பல […]

உள்ளூர்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இறுதி முடிவுகள்

  • May 7, 2025
  • 0 Comments

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தேசிய மக்கள் சக்தி – 4,503,930 வாக்குகள், 3927 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 2,258,480 வாக்குகள், 1,767 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 954,517 வாக்குகள், 742 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி – 488,406 வாக்குகள், 381 உறுப்பினர்கள் இலங்கை தமிழ் அரசு கட்சி – 307,657 வாக்குகள், 377 உறுப்பினர்கள் பொதுஜன முன்னணி – 387,098 […]

உள்ளூர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்தது

  • May 6, 2025
  • 0 Comments

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு 13,759 வாக்குச் சாவடிகளில் ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது அதன்படி இந்த முறை, 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 75,589 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், இதில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டிருந்தன அதன்படி, இந்தத் தேர்தலில் 8,287 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வாக்குப் […]

உள்ளூர்

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகைகளை ஆய்வு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

  • May 5, 2025
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்குப் யுத்த நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகளின் முகாம்கள், மற்றும் விடுதலைப் புலிகளின் வங்கிகள் மற்றும் பிற கட்டிடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில், தங்க நகைகளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் தற்போது இராணுவ புலனாய்வு சபையின் பொறுப்பில் உள்ளன. இவைகளை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு அனுப்பி, அவற்றின் இயல்பையும் மதிப்பையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் பிரதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை 2 நாடகளில் மீட்ட பொலிஸார்

  • May 5, 2025
  • 0 Comments

வவுனியாவில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த நகைகள் கொள்ளையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்ட நெளுக்குளம் பொலிஸார், பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ. சமரகோன் தலைமையில் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர். விசாரணைகளின் பின், ஞாயிற்றுக்கிழமை (04) கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயதுடைய […]

உள்ளூர்

யாழ் ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது

  • May 5, 2025
  • 0 Comments

ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகள் இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இரு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுப்படவுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன், பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் பொ. தயானந்தன், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) […]

உள்ளூர்

பாம்புடன் சமைத்த உணவை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்

  • May 2, 2025
  • 0 Comments

பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பாம்பு ஒன்று இருந்த நிலையில், அந்த உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. சமையல்காரர் உயிரிழந்த பாம்பை ஒதுக்கிவிட்டு மதிய உணவை பரிமாறியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கிழக்கு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மொகாமா நகரில் சுமார் 500 குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டதாக […]