இந்தியா

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் முதல் முதலாக ஊடகவியலாளர்களை சந்தித்தார்

  • May 1, 2025
  • 0 Comments

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் திரண்டனர். விஜயை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர். தவெகவினருக்கு நேற்று கடிதம் மூலம் விஜய் அறிவுரை வழங்கியதையும் ஏற்காமல் தொண்டர்கள் குவிந்துள்ளனர். மேலும், மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னார் மாவட்டத்தில்; மே தினம் கலைவிளையாட்டு நிகழ்வுகளாக மக்கள் கொண்டாடினர்

  • May 1, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இன்று மே தின நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக, மன்னார் வங்காலை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினர். அந்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்கலாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மே தினத்தை கொண்டாடியுள்ளனர். வங்காலை மீனவ சங்கம், மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் வங்காலை விளையாட்டுக் கழகம் […]

இந்தியா

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மோடி அனுமதி!

  • April 30, 2025
  • 0 Comments

பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ,ந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எப்போது, எங்கு தாக்குதல்களை நடத்துவது என்பதை முடிவு செய்ய நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை ,ந்தியப் பிரதமர் வழங்கியுள்ளதாக, இந்திய அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று புது டெல்லியில் நடைபெற்ற விசேட […]

உள்ளூர்

கத்தோலிக்கர்களின் ஆன்மீக தலைவரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

  • April 22, 2025
  • 0 Comments

நித்திய இளைப்பாற்றியடைந்த பரிசுத்த பாப்பரசருக்கு சிவப்பு நிற குருத்துவ உடை மற்றும் தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் செபமாலையுடன் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் பரிசுத்த பாப்பரசர் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்த வத்திக்கானில் உள்ள அவரது இல்லமான காஸா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளன. பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் 23 ஆம் திகதி புதன்கிழமை வத்திக்கான் நேரப்படி காலை 9 மணிக்கு சென் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, 26 ஆம் திகதி […]

உள்ளூர்

யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சொல்லப்பட்ட இளைஞன் கொலை செய்யப்பட்டிருக்கலாமென தாயார் சந்தேகம்

  • April 20, 2025
  • 0 Comments

கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞன் குறித்து பல்வேறு திருக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த வியாழக்கிழமை (17-04) எனது மகன் குளித்துவிட்டு வந்தவேளை 3.00 மணிக்கு பின்னர் எனது மகனை அவரது நண்பர் அழைத்துச் சென்றார். அவருடன் சென்றுகொண்டிருந்தபோது இன்னொரு நண்பர் குளிக்க வருமாறு தொலைபேசியில் கூறியவேளை எனது மகன் அவரிடம் சென்றுள்ளார். பொய்யான […]

உள்ளூர்

காணியிழந்த மக்களுடன் பொலிஸார் வசாவிளான் சந்தியில் சண்டித்தனம்

  • April 17, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது . ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முரண்பாட்டில் ஈடுபட்டார். தாம் எமது […]

உள்ளூர்

கிளிநொச்சியின் 3 பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

  • April 16, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று புதன்கிழமை மாவட்டங்களின் அஞ்சல் திணைக்களங்களிடம் கையளிக்கப்பட்டதாக அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார அறிவித்துள்ளார். வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், குறித்த பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் […]

உலகம் முக்கிய செய்திகள்

டொனால்ட் ரம்புக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதி!

  • April 15, 2025
  • 0 Comments

வடக்கு கிழக்கு உக்ரைன் நகரான சுமி மீது ரஷ்ய நடத்திய அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இரு தரப்பினரிடையே தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி […]

உள்ளூர்

முஸ்லீம் இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புகாவலில் வைப்பதற்கு ஜனாதிபதி ஒப்பமிட்ட ஆவணம் வெளிவந்தது

  • April 7, 2025
  • 0 Comments

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் கொழும்பில் ஸ்டிக்கரினை ஒட்டிய இளைஞனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அனுமதி வழங்கிய ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க , முகமட் ருஸ்டி தீவிரவாத சித்தாந்தங்களால் தூண்டப்பட்டு, சமூகங்களிற்கு இடையில்அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்குதீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுவது , பாதுகாப்பு படையினரிடம் அத்தகைய செயல்களை தெரிந்தே மறைப்பது குறித்து சந்தேகம் காணப்படுபவதாகவும் இதன் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மகன் தாயை அடித்தே கொன்றுள்ளான்

  • April 7, 2025
  • 0 Comments

வீட்டு வளாகத்தில் நேற்று (06-04) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகனுடன் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து மகன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உடைந்த துடைப்பம் மற்றும் தடி ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கொலையுடன் தொடர்புடைய […]