இந்தியா உள்ளூர்

இந்திய பிரதமரின் பணிப்புரைக்கமைய தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

  • April 7, 2025
  • 0 Comments

இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ஆம் திகதி இலங்கை வந்தடைந்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது […]

உள்ளூர்

இந்திய பிரதமரிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து மகஜர் கையளிபபு

  • April 5, 2025
  • 0 Comments

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு நேற்று (04-04) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது. […]

இந்தியா உள்ளூர்

இலங்கை – இந்தியா இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • April 5, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது    

உள்ளூர்

இலங்கையில் இறங்கினார் இந்தியப் பிரதமர்

  • April 5, 2025
  • 0 Comments

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (4) இரவு 8.33 […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

  • April 3, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் பரிசீலிக்கப்பட்டபோது, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களுடன் வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் இணக்கம் எட்டப்பட்டதை அடுத்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளுக்கான பிரிட்டனின் தடையை ஆராய அமைச்சரவை குழு நியமனம்

  • April 3, 2025
  • 0 Comments

பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தடை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காகக் குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் […]

உள்ளூர்

நித்தியானந்தா சுவாமிகள் இறந்துவிட்டார்

  • April 2, 2025
  • 0 Comments

நித்தியானந்தா இறந்துவிட்டதாக வெளியான காணொளி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நித்தியானந்தாவின் சகோதரியின் மகனே நித்தியானந்தா இறந்துவிட்டதாக காணொளியை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த காணொளி வெளியாகியதையடுத்து அவரை பின்பற்றும் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும்,அவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நித்தியானந்தாவின் சகோதரி மகன், நித்தியானந்தா ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் காணொளி ஒன்றில் தெரிவித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாணசபை தேர்தல்கள் நடத்துவதறகான சாத்தியமில்லையென அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

  • April 1, 2025
  • 0 Comments

மாகாண சபை தேர்தல் இந்த வருடம்இடம்பெறாது எனஅமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்றால் ஆறுமாதத்திற்குள் இலங்கைமூன்று தேர்தல்களை சந்தித்திருக்கும் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மற்றுமொரு தேர்தல் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தொடர்ந்து தேர்தல்களை நடத்திக்கொண்டிருக்க முடியாது,அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தலுடன் பிரதானமான தேர்தல்கள் முடிவிற்கு வரும்,மாகாணசபை தேர்தல்களை மாத்திரம் நடத்தவேண்டும்,சட்டங்களை மாற்றவேண்டியுள்ளதாலும்,நாட்டின் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபை தேர்தல்களை இந்த வருடம் […]

இந்தியா முக்கிய செய்திகள்

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்:அமைச்சர் தங்கம் தென்னரசு

  • April 1, 2025
  • 0 Comments

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில்  பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 மாதத்தில் நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்றார். கடந்த 29ஆம் தேதி சட்டசபையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். கலைஞர் […]

உலகம் முக்கிய செய்திகள்

கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள மியன்மார் மக்கள்!

  • April 1, 2025
  • 0 Comments

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலுக்கிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஐ கடந்து 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளதாக மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மியான்மரில் ஏராளமான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் சீட்டு கட்டுகள் போல சரிந்து உருக்குலைந்து கிடக்கின்றன. எங்கு […]