யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட ஆண் குழந்தை மரணம்
யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை கடந்த (28.03) அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 26ஆம் திகதி, குழந்தைக்கு 2 மாதங்களில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 27ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி இரவு உயிரிழந்தது. […]

