உள்ளூர் முக்கிய செய்திகள்

பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு எதிராக அரசுக்கு நவம்பர் 7ஆம் திகதி வரை காலக்கெடு

  • November 5, 2025
  • 0 Comments

அந்நாளுக்குள் இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டி பிற்பகல் 2 மணி வரை நடத்தும் அரசின் முடிவை எதிர்த்து, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அரசுக்கு நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. அந்நாளுக்குள் இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

உள்ளூர்

சுங்கத்துறை எதிர்பார்த்த வருவாயைவிட அதிமாக ஈட்டியுள்ளது

  • November 4, 2025
  • 0 Comments

இலங்கை சுங்கத்துறை, 2025ஆம் ஆண்டுக்கான தனது வருவாய் இலக்கை மீறி 117 வீத வருவாயை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல், பாராளுமன்றத்தின் “Ways and Means” குழுவில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, செப்டம்பர் 30ஆம் திகதி வரையில் சுங்க வருவாய் ரூ.1,737 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது திட்டமிடப்பட்ட ரூ.1,485 பில்லியன் இலக்கை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது ஒரு பெரும் வருவாய் உயர்வாக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்

  • November 3, 2025
  • 0 Comments

இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பு மேம்படுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடல் கடந்தது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோர் கடற்றொழில் அமைச்சில் சந்தித்து, நட்பு மற்றும் பணிசார்ந்த விவாதங்களை நடத்தினர். சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கடற்றொழில் மற்றும் மீன்வளத் துறைகளை நவீனமயப்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீட்டு விரிவாக்கம் மற்றும் அறிவு […]

உள்ளூர்

பாடசாலை நேர நீட்டிப்பு குறித்து ஆசிரியர்கள் நிலைப்பாடு மாறவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்

  • November 3, 2025
  • 0 Comments

பாடசாலை நேரத்தை நீட்டிக்கும் அரசாங்கத் தீர்மானத்துக்கு சில ஆசிரியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்ற அரசாங்கக் கூற்றை இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) எதிர்கொண்டு, அதற்கான ஆதாரத்தை கேள்வி எழுப்பியுள்ளது. ஆசிரியர் சங்கங்களின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டில் இதுவரை எந்தவித மாற்றமும் இல்லையென அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசுகையில், ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததாவது: ‘பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டது கல்வி, […]

உள்ளூர்

மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் திருகோணமலையில் விபத்திற்குள்ளானது

  • November 2, 2025
  • 0 Comments

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் இன்று துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்ததில், திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த கோவில் மற்றும் ஒரு கொள்கலன் கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்துள்ளனர். அண்மைக்காலமாக குறித்த துறை முகத்தில் இருந்து மன்னார் நோக்கி காற்றாலை எடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்தியா – இலங்கை விவசாய ஒத்துழைப்புக்கான கூட்டு செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைப்பெற்றது

  • November 1, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான விவசாயம் தொடர்பான முதலாவது கூட்டு செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (30-10) இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளர் தேவேஷ் சதுர்வேதி மற்றும் இலங்கை விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இலங்கை சார்பில் விவசாயத் திணைக்களத்தின் மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம் ஜி.வி. சியாமலி, கால்நடை அபிவிருத்தி பணிப்பாளர் பி.எஸ்.எஸ். பெரேரா […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பாண் விற்பனையாளர் ஹெரோயினுடன் கைது

  • November 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனை செய்து வந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாண பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணில் கைதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

  • October 30, 2025
  • 0 Comments

கொழும்பு கோட்டை நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 2026 ஜனவரி 28 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. நேற்று (29-11) நடைபெற்ற விசாரணையில், கோட்டை நீதவான் இஸுரு நெத்திக்குமாரா குற்றப்புலனாய்வு துறைக்கு (ஊஐனு) விசாரணையை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் பணித்தார். மேலும், கடந்த விசாரணை நாளில் நீதிமன்ற வளாகத்தின் அருகே நடந்த சம்பவங்கள் […]

உள்ளூர்

சீனா இலங்கையுடன் இணைந்து வலுவான வளர்ச்சி பயணத்திற்கு தயாராகவுள்ளது- இலங்கைக்கான சீன தூதர்

  • October 30, 2025
  • 0 Comments

‘சீனா இலங்கையுடன் இணைந்து வலுவான வளர்ச்சி பயணத்தை மேற்கொள்ளத் தயாராக உள்ளது,’ என்று இலங்கைக்கான சீன தூதர் கி ஜென்ஹோங் தெரிவித்தார். அவர் கொழும்பில் நடைபெற்ற ‘சீனாவும் உலகமும் – வளமான எதிர்காலத்துக்கான சீனா–இலங்கை உரையாடல்’ என்ற நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வாறு கூறினார். அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், ‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான சீனாவின் வளர்ச்சி திட்டம் இலங்கைக்கும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைத் திறக்கவுள்ளது. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக சீனா நெருக்கமாக இணைந்து செயல்பட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

CEB-க்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் – நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்

  • September 19, 2025
  • 0 Comments

இலங்கை மின்விநியோக சபை தற்போது மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதால், மேலும் சில மாதங்கள் அது இயங்க வேண்டியிருக்கும் நிலையில், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலா தற்போது வகித்து வரும் இடைக்காலத் தலைவருக்கு பதிலாக நிரந்தரத் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மின்சார நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ECA பொதுச் செயலாளர் சஞ்ஜீவ தம்மிகா, ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது: ‘ஊநுடீ ஏற்கனவே நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், மறுசீரமைப்பு முழுமை பெறும் வரை அது மேலும் […]