செம்மணி மனித புதைகுழியில் அகழ்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடு 4 முதல் 5 வயது சிறுமியினுடையது என சந்தேகம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வு வழக்கு நேற்று (15-07) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில், நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தினார். அகழ்வுப் பணியின் இரண்டாம் கட்டம் தொடர்பான தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையும், சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் நீதிமன்றத்திற்கு […]