உள்ளூர்

அமெரிக்க வரி விதிப்பால் 3 இலட்சம் பேர் வேலையிழக்கும் நிலையேற்பட்டுள்ளது

  • July 11, 2025
  • 0 Comments

அமெரிக்கா, 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு 30 வீத வரியை விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, இலங்கையின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய ஆடை ஏற்றுமதித் துறையை ஆழமாகக் குலைக்கக்கூடியது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்தத் துறையில் சுமார் 300,000 பேர் நேரடியாக வேலை செய்து வருகின்றனர். மேலும், தனியார் தையல் தொழிலாளர்கள், சில்லறை தொழிலாளர்கள், மற்றும் பகுதி நேர உழைப்பாளர்கள் என ஏராளமான குடும்பங்கள் இதன் […]

உள்ளூர்

செம்மணி மனிதபுதைகுழி அகழ்வுப்பணி மீண்டும் எதிர்வரும் 21 ம் திகதி ஆரம்பம்

  • July 10, 2025
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்டது வெள்ளை மாளிகை

  • July 10, 2025
  • 0 Comments

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09-07) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தாதியர்களின் ஓய்வூதிய வயது 60 என அரசினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

  • July 8, 2025
  • 0 Comments

செவிலியர்களின் கட்டாய ஓய்வூதிய வயதை 60 ஆகக் குறைத்ததால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் உருவாகக்கூடும் என அரசாங்க சேவை ஒன்றிய செவிலியர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தெரிவித்ததாவது, ‘ஓய்வூதிய வயதைக் குறைத்ததால், தற்போது நிலவுகின்ற செவிலியர் பற்றாக்குறை மேலும் மோசமாகும்.’ முந்தைய காலங்களில், ஓய்வூதிய வயதை 63 வரை நீடிக்க வேண்டும் எனக்கோரி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக சுகாதார அமைச்சால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி ஆனையிறவில் டிப்பரும் ஹையேஸ் வாகனமும் விபத்து பயணிகள் படுகாயம்

  • July 8, 2025
  • 0 Comments

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் 7ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5மணியளவில் டிப்பருடன் ஹையேஸ் மோதி பாரியளவான விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற டிப்பருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையேஸ் நேருக்கு நேர் மோதி பாரியளவான விபத்து ஏற்பட்ட நிலையில் ஹையேஸில் பயணித்த பயணிகள் எந்த வித உயிர்ச் சேதங்களும் இன்றி பலத்த காயங்களுடன் தப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலத்த காயம் அடைந்த […]

உள்ளூர்

அரசாங்கம் செய்த படுகொலைகளை அரசாங்கமே விசாரிக்கமுடியாது- தமிழரசுக்கட்சி

  • July 8, 2025
  • 0 Comments

உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை என கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்வதாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில், நாட்டின் உள்ளக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இன்று முதல் தினமும் தொடரூந்து சேவை

  • July 7, 2025
  • 0 Comments

கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி […]

உள்ளூர்

இனி அரச மருத்துவமனைகளில் சிறந்த ஆரோக்கியமான உணவு வழங்கப்படும்- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

  • July 7, 2025
  • 0 Comments

அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்கான சிறப்பு திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான விசேட உணவு வேலைத்திட்டம் தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதற்கமைய மஹரகம புற்றுநோய் மருத்துவமனையை மையமாகக் கொண்டு இந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசியல்வாதிகளின் தாளத்திற்கு ஆடாத அரச சேவையினை உருவாக்க வேண்டுமென்கிறார் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பணிப்பாளர்

  • July 6, 2025
  • 0 Comments

அண்மைய நாட்களாக நாட்டில் ஊழல், மோசடி ஊறிப்போயுள்ளது. குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக மாத்திரம் ஊழலை நிறுத்த முடியாது. முதலில் மனப்பான்மை ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும்.தமக்கு உரிமை இல்லாத ஒன்றை வழங்கும் போது அதனை நிராகரிக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும். அரச அதிகாரிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். அரசியல்வாதிகள் கூறும் தவறான தீர்மானங்களை நிறைவேற்றாத அரச சேவை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்ற […]

உள்ளூர்

நிதியின்மையால் இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு பாதிப்பென்கிறார் முன்னாள் எம்.பி. சுமந்திரன்

  • July 6, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபைக்கு நிதி அளித்துவரும் நாடுகளில் அமெரிக்கா முதன்மை நாடாகத் திகழ்வதாகவும், எனவே அமெரிக்கா அதன் நிதியளிப்பை நிறுத்தும் பட்சத்தில் அது இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டங்களில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்துமென இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரின்போது பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதியதொரு பிரேரணை கொண்டுவரப்படவிருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய […]