வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் வலிக்கு நீதி வழங்க வேண்டுமென்கிறார் நீதியமைச்சர்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் துன்பத்துக்கு முகங்கொடுத்துவருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதும், அவர்களுக்குரிய நீதியை வழங்குவதும், அவர்களுக்கான பொருளாதார மற்றும் சமூக ரீதியான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதும் இன்றியமையாததாகும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான முதலாவது தேசிய மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்றது. அதன் நீட்சியாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இரண்டாவது தேசிய மாநாடு கடந்த ஜுன் மாதம் 25 – […]