மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்- ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்
நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும். அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார். […]