உள்ளூர்

அடக்கியாளப்படும் ஆனையிறவு உப்பள தெரிழலாளர்களின் தொடர் போராட்டமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடும் பதிவு

  • May 23, 2025
  • 0 Comments

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி நேற்று (22-05) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் 22ஆம் திகதி வியாழக்கிழமை மாலை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் நான்கு பேர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு பிரச்சனைகளை முன் […]

உள்ளூர்

அமைச்சர் சந்திரசேகர் அடித்தார் அந்தர் பெல்டி பிரபாகரனுக்கு சிலைவைப்பதாக தெரிவிக்கவில்லையாம்

  • May 23, 2025
  • 0 Comments

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (22-05) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷண ராஜகருணா எம்பி தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு சிலை வைப்பது […]

உள்ளூர்

நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையாவிட்டால் பொருளாதார சுனாமியில் சிக்குமென சஜித் எச்செரிக்கை

  • May 22, 2025
  • 0 Comments

ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் தொடங்கிய தொழிற்சாலை இன்று முற்றிலும் மூடப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். எதிர்காலத்தில் 2028 முதல் நாட்டின் கடனை திரும்ப செலுத்த 5மூ பொருளாதார வளர்ச்சி விகிதம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நிதிச் சட்ட கட்டளைகள் மீதான விவாதத்தில் தெரிவித்தார். தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவதை கணக்கில் கொண்டு, 5மூ வளர்ச்சியை அடைவது கடினம் என்ற அவர், இவ்வாறு வளர்ச்சி விகிதம் நிலைநிறுத்தப்படவில்லை […]

உள்ளூர்

வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற பிரதமரை வலியுறுத்தவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

  • May 22, 2025
  • 0 Comments

பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு உறுதியாக வலியுறுத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் […]

உள்ளூர்

காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கலை தடுக்குமாறு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய, சுவிட்ஸர்லாந்து நாடுகளிடம் பேரவை வேண்டுகோள்

  • May 21, 2025
  • 0 Comments

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டியில் விகாரை நிர்மாணம் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்பு முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டு இராஜதந்திரகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், காணி அபகரிப்பையும், தொல்பொருள் அடையாளங்கள் பௌத்தமயப்படுத்தப்படுவதையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில் […]

உள்ளூர்

அரசின் காணி அபகரிப்பு தற்காலிக இடைநிறுத்தம் தீர்வை தராதென்கிறார் சட்டத்தரணி சுமந்திரன்

  • May 21, 2025
  • 0 Comments

வட மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எனவே அவ்வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்படவேண்டும் என மீளவலியுறுத்தியுள்ளார். காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை […]

உள்ளூர்

வடக்கு காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு உடன் மீளப் பெறவேண்டுமென ; கஜேந்திரகுமார் பிரேரணை சமர்ப்பித்துள்ளார்

  • May 20, 2025
  • 0 Comments

வடக்கிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்குப் பிரேரணையொன்றை அனுப்பிவைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை அரசு கையகப்படுத்துதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 28.03.2025 திகதி இடப்பட்ட, 2430ஃ2025 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள 5000 ஏக்கருக்கும் […]

உள்ளூர்

மஹிந்த, குடும்பம் மரணித்த படையினருக்கு அஞ்சலி செலுத்தினர்

  • May 20, 2025
  • 0 Comments

முப்பது வருடகால யுத்தத்தில் உயிரிழந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் பாராளுமன்ற மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள போர்வீரர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ‘இன்று நாங்கள் […]

உள்ளூர்

கல்கிசையில் இளைஞனை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரி கைது

  • May 19, 2025
  • 0 Comments

அண்மையில் கல்கிசையில் 19 வயது இளைஞரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு உதவிய இருவர் உட்பட மொத்தம் நான்கு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் உள்ளூர்வாசிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிதாரி வசம் இருந்த ஒரு கைக்குண்டு மற்றும் ஒன்பது மிமீ துப்பாக்கியின் 15 தோட்டாக்கள், ஒரு மோட்டார் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வை காணாமல் வெற்றிக் கொண்டாட்டமா? – மனோ கணேசன் கேள்வி

  • May 19, 2025
  • 0 Comments

இலங்கையின் அனைத்து மக்களும் இறந்துபோன தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவுகூரும் ஓர் எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும். தெற்கில், வடக்கில் நிகழ்ந்த அரச மற்றும் அரச சார்பற்ற பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டங்களையும் கூட கொண்டாடலாம். ஆனால், இந்த இலக்கை அடைய இலங்கை, முப்பது வருட யுத்தம் நிகழ்ந்தமைக்கான மூல காரணங்களை தேடியறிந்து அவற்றுக்குத் தீர்வு தேட வேண்டும். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார […]