உள்ளூர் முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி – ஐக்கிய தேசியக் கட்சிகள் உடன்பாடு

  • May 19, 2025
  • 0 Comments

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பான கொள்கைகள் குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கு ஒரு பொதுவான ஒருமித்த கருத்து இதன்போது எட்டப்பட்டதாக அந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பற்றி அறிக்கையினை மன்றில் சமர்பிக் நீதிமன்றம் உத்தரவு

  • May 19, 2025
  • 0 Comments

சமீபத்தில் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூன் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

உள்ளூர்

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

  • May 15, 2025
  • 0 Comments

இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்தமையை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனால் நீதிக்காக இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர் இலங்கையில் மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ள ஹரோ மேற்கிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் இந்த வருட ஆரம்பத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்தது, ஆனால் நீதிக்கான […]

உள்ளூர்

மட்டக்களப்பில் பெண் மர்ம மரணம்

  • May 15, 2025
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, 1ஆம் வட்டாரத்தில் உள்ள பஸார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்ணே அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண்ணின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர்

கமால் குணரட்ணவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

  • May 15, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் ஆவணத்தை ஆதாரங்களுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சிடம் கையளித்துள்ளது இது தொடர்பில் ஐடிஜேபி மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததை குறிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டியமைக்கான ஆதாரங்கள் அடங்கிய […]

உள்ளூர்

தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் வவுனியாவில் சந்திப்பு

  • May 15, 2025
  • 0 Comments

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று  நடைபெறுகிறது. உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கஜேந்திரகுமாiர் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்

  • May 14, 2025
  • 0 Comments

உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேரில் சந்திப்பதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கொள்கை அடிப்படையிலான கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பரஸ்பரம் தெளிவு படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு அப்பால் கொள்கை அளவில் கூட்டிணைய வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம் வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் 4 சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டியிடுவதென கஜேந்திரகுமார் தெரிவிப்பு

  • May 14, 2025
  • 0 Comments

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை […]

உள்ளூர்

இலங்கை இனப்படுகொலை நடைபெறவில்லையென அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

  • May 14, 2025
  • 0 Comments

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன். ஒரு விடயத்தை நான் […]

உள்ளூர்

பொருளாதார போரை வெல்லவும் உலகின் போரை வெல்லவும் புத்தரின் மார்க்கத்தில் வழியுண்டு -எதிர்க்கட்சி தலைவர் சஜித்

  • May 12, 2025
  • 0 Comments

இலங்கையும், முழு உலகமும் இந்த நேரத்தில் பொருளாதார போரையும், அமைதி தொடர்பான சவாலையும் எதிர்கொண்டுள்ளன. இந்த சவால்களை வெல்ல புத்தர் காட்டிய தம்ம மார்க்கத்தில் தெளிவான தீர்வுகள் உள்ளன என வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும்போது, பௌத்த தத்துவம் காட்டும் காரண-விளைவு அறத்தை நன்கு […]