உள்ளூர்

பயங்கரவாத தடை சட்டம் 3 மாதத்திற்குள் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

  • May 11, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கவும், அதற்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நீக்காது திருத்தங்களை கொண்டு வரவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நீண்டகாலமாக உள்ளது. குறிப்பாக விடுதலை […]

உள்ளூர்

வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சிக்கு பல தரப்புகளுடன் பேசுவதாக அரசாங்கம் தெரிவிப்பு

  • May 11, 2025
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சியை ஏற்படுத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் வெற்றியளித்துள்ளதாகவும் ஆளும் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு வடக்கு கிழக்கு அரசியல் தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். நடைப்பெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடு முழுவதும் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் […]

உள்ளூர்

உள்ளூராட்சி மன்றங்களில் தமிழசுக்கட்சிக்கு ஆதரவளிக்க தயாரென சயிக்கல் கட்சி தெரிவித்துள்ளது

  • May 10, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்பாணத்தில் இன்று ) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது. இவ்வாறான ஒரு காலச் சூழலில் […]

உள்ளூர்

முல்லைத்தீவு குருந்தூர்மலை பிக்கு சண்டித்தனம், விவசாயிகள் 3வர்; பொலிஸாரால் கைது

  • May 10, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களை பௌத்த பிக்கு தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளார். இந்த காணிகளுக்கு அண்மையாக இன்று குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக […]

உள்ளூர்

7 மாதங்களில் 79 துப்பாக்கிச்சூடு 52 பேர் உயிரிழப்பு; – அமைச்சர் ஆனந்த விஜேபால

  • May 10, 2025
  • 0 Comments

போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்டுள்ளது. 2024.09.21 முதல் 2025.05.07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 79 துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (9-05) நடைபெற்ற அமர்வின்போது சமூக கட்டமைப்பில் நாளாந்தம் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பு கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்த்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு இடமாற்றம்

  • May 8, 2025
  • 0 Comments

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் பாடசாலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது, குறித்த சம்பவம் தொடர்பாக ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி […]

உள்ளூர்

இலங்கையில் கையிருப்பு வீழ்ச்சியில் என மத்திய வங்கி அறிவித்துள்ளது

  • May 8, 2025
  • 0 Comments

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2025 ஏப்ரல் மாத இறுதியில் 3 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் 6.53 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பானது ஏப்ரல் மாத இறுதியில் 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட நிலையில் உயிரை மாய்த்த மாணவிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் !

  • May 8, 2025
  • 0 Comments

கொழும்பு கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கொட்டாஞ்சேனை விவேகாந்தர் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்னாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன், கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள மாணவியின் வீட்டுக்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் றெக்டரில்; சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்

  • May 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று இரவு தனது உழவு இயந்திரத்தின் கீழே இறங்கி நின்றவாறு திறப்பினை இயங்க செய்துள்ளார். இதன்போது கியர் இயக்கத்தில் இருந்த உழவு இயந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்ததால் அவர்மீது உழவு […]

உள்ளூர்

கொழும்பு மாநகர சபையில் சஜித் அணியே ஆட்சிமைக்கும்- ரஞ்சித் மத்தும பண்டார

  • May 7, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுடன் இணைந்து அமைக்கும் என கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார் புதிய முதல்வர் தமது கட்சியைச் சேர்ந்தவரே நியமிக்கப்படுவார் என அவர் மேலுமி; தெரிவித்துள்ளார் ஆளும் தரப்பு பெரும்பான்மையைப் பெறாத, பிற உள்ளூராட்சி சபைகளில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும […]