எல்லா – வெல்லவாயை விபத்திற்கு சாரதியே காரணம்- பிரதி பொலிமா அதிபர்
எல்லா – வெல்லவாயை பிரதான வீதியில் கடந்த வாரம் நிகழ்ந்த பேருந்து விபத்து, ஓட்டுநரின் அலட்சியத்தினால் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொடா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ஆம் திகதி 24வது மைல் கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றது. தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுற்றுலா பயணத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்ததுடன், 17 […]