சட்டவிரோத படுகொலைகள் இலங்கையில் தொடர்கின்றன – மனித உரிமை ஆணைக்குழு கவலை
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவர அறிக்கையில், கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அறிக்கையில், பொலிஸாரின் காவலில் இருந்தபோது பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை குற்றம் இடம்பெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றபோது பல்வேறு கொலைச்சம்பவங்கள் நடந்ததாகவும், இந்நேரங்களில் சந்தேகநபர்கள் தங்களை தாக்கினர் அல்லது தப்பிக்க முயன்றனர் என்றே பொலிஸார் விளக்கம் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
