முக்கிய செய்திகள்

இத்தாலி, 2026 டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றது

  • July 14, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்த உள்ள 2026 டி20 உலகக் கிண்ண தொடருக்காக, இத்தாலி அணியின் தகுதி பெற்ற சாதனை ஒரு வரலாற்றுப் பதிவு ஆகியுள்ளது. இதுவே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐஊஊ) போட்டிக்காக இத்தாலி தகுதி பெற்றது முதல் முறையாகும். இத்தாலி அணி, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) ஹேக்கில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்திடம் 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்த போதிலும், தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருந்து 2026 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அமெரிக்க வரிவிதிப்பு இலங்கையின் பொருளாதார நரம்பில் நீளும் அழுத்தம்

  • July 13, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசு, சமீபத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு மேலதிக வரிவிதிப்பை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் தாக்கம் உலக வணிகத்தில் அதிர்வெண்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இலங்கையின் சில முக்கிய ஏற்றுமதி பொருட்கள் – குறிப்பாக ஆடைத் தயாரிப்புகள், தேயிலை, ரப்பர் சார்ந்த பொருட்கள் என்பவை இதில் இடம் பெற்றுள்ளன. இதை ஒரு சாதாரண வரித்தீர்மானமாக எண்ணுதல் தவறானதாகும் ஏனெனில் அமெரிக்கா இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தை. அதிலும் குறிப்பாக ஆடைத் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தெற்காசியாவில் ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கையுள்ளது- ரஸசிய வெளிவிவகார அமைச்சர்

  • July 11, 2025
  • 0 Comments

தெற்காசியப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கை திகழ்வதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லவ்ரோ உறுதியளித்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவின் (ஆசியான்) அமைச்சர் மட்ட நிகழ்வுகளின் ஓரங்கமாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லவ்ரோவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (10-07) நடைபெற்றது. இச்சந்திப்பின்போது இலங்கை – ரஷ்ய நல்லுறவில் அழுத்தங்களைத் தோற்றுவித்திருக்கும் […]

உள்ளூர்

செம்மணி மனிதபுதைகுழி அகழ்வுப்பணி மீண்டும் எதிர்வரும் 21 ம் திகதி ஆரம்பம்

  • July 10, 2025
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய […]

உள்ளூர்

இலங்கைக்கு அமெரிக்கா வரியை 30 வீதமாக அதிகரித்தது

  • July 10, 2025
  • 0 Comments

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. முன்னதாக இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 வீத வரி விதித்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக 2 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதன் பின்னர் 44 வீதமாக அறிவித்திருந்தார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு […]

உள்ளூர்

யாழில் மனைவி தாய்வீட்டிற்கு சென்றதால் கணவன் உயிர்மாய்ப்பு

  • July 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி ஆனையிறவில் டிப்பரும் ஹையேஸ் வாகனமும் விபத்து பயணிகள் படுகாயம்

  • July 8, 2025
  • 0 Comments

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் 7ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5மணியளவில் டிப்பருடன் ஹையேஸ் மோதி பாரியளவான விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற டிப்பருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையேஸ் நேருக்கு நேர் மோதி பாரியளவான விபத்து ஏற்பட்ட நிலையில் ஹையேஸில் பயணித்த பயணிகள் எந்த வித உயிர்ச் சேதங்களும் இன்றி பலத்த காயங்களுடன் தப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலத்த காயம் அடைந்த […]

உள்ளூர்

அரசாங்கம் செய்த படுகொலைகளை அரசாங்கமே விசாரிக்கமுடியாது- தமிழரசுக்கட்சி

  • July 8, 2025
  • 0 Comments

உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை என கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்வதாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில், நாட்டின் உள்ளக […]

உள்ளூர்

கச்சத்தீவு மீட்பு என்பது தமிழக அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதி மட்டுமே!

  • June 29, 2025
  • 0 Comments

கச்சத்தீவு இலங்கைக்கு இராஜதந்திர ரீதியாக சொந்தமானது என்பதால், அது எந்த வகையிலும் வேறு எந்த தரப்பினருக்கும் ஒப்படைக்கப்படாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் காலங்களில் தமிழக அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும், அரசியல் வாக்குறுதியாகவும் மக்களை சூடேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் தேர்தல் வாக்குறுதியாகவே கச்சத்தீவு மீட்பு என்ற விடயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் இந்திய மீனவர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக, அந்தப் பகுதியில் […]

உள்ளூர்

யாழ். செம்மணியில் மேலும் 3 மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!

  • June 28, 2025
  • 0 Comments

யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றுவரை 24 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 3 மனித மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டு தொகுதியில், தாயொருவர் குழந்தையை அணைத்த […]