இந்தியா

அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு

  • June 26, 2025
  • 0 Comments

ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் கடந்த 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும் விடுதி மற்றும் அதன் அருகில் இருந்வர்கள் 29 பேரும் உயிரிழந்தனர். ஜூன் 13ஆம் தேதி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. கருப்புப் பெட்டி கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், தரவுகளை டவுன்லோடு செய்ய வெளிநாட்டிற்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணியில் அமைச்சர் சந்திரசேகரனின் வாகனம் மீதும் ரஜீவன் எம்.பி. மீதும் தாக்குதல்

  • June 25, 2025
  • 0 Comments

யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர். இன்று மதியம் ஒரு மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர். இதன்பொழுது போராட்டகாரர்களால் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டதுடன் அவரது வாகனத்தின் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விரைவாக அவ்விடத்தை விட்டு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சி எம்.பி.ரவிகரன் தமிழரசுக் கட்சியின் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்

  • June 25, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார். அதேவேளை ரவிகரன், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் […]

உள்ளூர்

வடக்கிலே தமிழர்கள் வற்றிபோகின்றார்கள் என ஆறு திருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார்.

  • June 25, 2025
  • 0 Comments

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் நேற்று (24-06) நடைபெற்ற நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய சந்தர்ப்பத்திலே அவர் அங்கு உரையாற்றினார். இன்று தேசியம், தமிழ்த் தேசியம் மற்றும் சுதேசியம் ஆகிய சொற்களெல்லாம் அரசியல்வாதிகளிடத்தே அடிக்கடி நடமாடினாலும் மகாஜனாக் கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பா பிள்ளை அவர்கள் இந்த மண்ணிலே பிறந்த நாங்கள் ஏன் சுதேசியத்தைப் பாதுகாக்கக்கூடாது அதைப்பற்றி பேசக் கூடாது என்று அன்றே அடியெடுத்துக்கொடுத்தவர். அதனாலேயே அவரது சிலையின் பெயர்ப்பலகையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்- அமைச்சர் சந்திரசேகர்

  • June 14, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது. எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் […]

உள்ளூர்

வடக்கில் 10 பொலிஸ் நிலையங்களை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதா?

  • June 14, 2025
  • 0 Comments

வடக்கில் சுமார் 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இனந்தெரியாத நபர் தொலைபேசி அழைப்பொன்றை விடுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணி வரை வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸாhர் விசாரணைகள் ஆரம்பித்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் […]

உலகம் முக்கிய செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா பலத்த தாக்குதல். தடுமாறும் ஜெலென்ஸ்கி

  • June 7, 2025
  • 0 Comments

400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இன்று ரஷ்யர்களால் உக்ரைன் மீது ஏவப்பட்டதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இன்று ரஷ்யர்களால் ஏவப்பட்டன. நமது நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் நகரங்களில் மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் நாள் முழுவதும் தொடர்ந்தன. 80 பேர் காயமடைந்தனர், சிலர் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, உலகில் […]

உள்ளூர்

தேர்தல் காலத்தில் பிரபாகரனுக்கு சிலை அமைப்பதாகவும் பிரபாகரன் கடவுள் என்றும் ஜேவிபியால் பாடல் உருவாக்கப்பட்டது- அர்ச்சுனா எம்.பி

  • June 6, 2025
  • 0 Comments

2009 ஆம் ஆண்டுக்கு முன் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த பொருட்கள் தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன : 300 கொள்கலன்கள் குறித்து அர்ச்சுனா வெளியிட்ட பரபரப்பு தகவல் அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன. 2009க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சுயேச்சைக்குழு […]

உள்ளூர்

தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்ததா என பரிசீலிக்கப்படும் – டக்ளஸ்

  • June 5, 2025
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் இதனைத் குறிப்பிட்டார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்துக்கு வருகை தந்த சிவஞானம், வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் […]

உள்ளூர்

சில ஊடகங்கள் ஊடக சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதாக நீதியமைச்சர் குற்றச்சாட்டு

  • June 4, 2025
  • 0 Comments

நீங்கள் என்ன சொன்னாலும் எவ்வளவு பிழையான விடயங்களை தெரிவித்தாலும் உங்கள் சகோதரருக்கு பொதுமன்னிப்பு கிடைக்காது என ஊடகமொன்றிற்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார் இலங்கையின் ஊடகமொன்று தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலிற்காக ஊடக சுதந்திரத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார இது குறித்து எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் சில ஊடகங்கள் ஊடகசுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்கின்றன என குறிப்பிட்டுள்ளார். நீங்கள் என்ன சொல்லாலும் உங்கள் சகோதரருக்கு […]