உள்ளூர்

கர்ப்பமான மனைவியையும் வயிற்றிலுள்ள சிசுவையும் தூக்கில் தொங்கவிட்ட கொன்ற கணவன்- மாத்தறையில் சம்பவம்

  • May 19, 2025
  • 0 Comments

மாத்தறை தெனியாய என்சல்வத்த கொஸ்குளுன தோட்டத்தின் நேற்று இரவு பெண்ணொருவர் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 06.45 மணியளவில் மணைவி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக கணவன் வீட்டு வாசலுக்கு அருகில் வந்து கத்தியுள்ளார். உடனே ஊராருக்கு சந்தேகம் ஏற்படவே கணவன் மாயமாக சென்று பொலிஸ் நிலையத்தில் ஆஜர் ஆகியுள்ளார். ஊரார் உடனே 1990 அம்பியுலன்ஷ் மற்றும் தெனியாய பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். குறித்தப்பெண் இறந்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில் இந்த பெண் 9 மாதங்கள் […]

உள்ளூர்

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

  • May 15, 2025
  • 0 Comments

இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்தமையை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனால் நீதிக்காக இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர் இலங்கையில் மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ள ஹரோ மேற்கிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் இந்த வருட ஆரம்பத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்தது, ஆனால் நீதிக்கான […]

உள்ளூர்

மட்டக்களப்பில் பெண் மர்ம மரணம்

  • May 15, 2025
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, 1ஆம் வட்டாரத்தில் உள்ள பஸார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்ணே அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண்ணின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர்

கமால் குணரட்ணவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

  • May 15, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் ஆவணத்தை ஆதாரங்களுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சிடம் கையளித்துள்ளது இது தொடர்பில் ஐடிஜேபி மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததை குறிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டியமைக்கான ஆதாரங்கள் அடங்கிய […]

உள்ளூர்

தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் வவுனியாவில் சந்திப்பு

  • May 15, 2025
  • 0 Comments

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று  நடைபெறுகிறது. உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் […]

உள்ளூர்

முல்லைத்தீவு குருந்தூர்மலை பிக்கு சண்டித்தனம், விவசாயிகள் 3வர்; பொலிஸாரால் கைது

  • May 10, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களை பௌத்த பிக்கு தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளார். இந்த காணிகளுக்கு அண்மையாக இன்று குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக […]

உள்ளூர்

யாழில் போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்த்தர் தற்கொலை

  • May 9, 2025
  • 0 Comments

யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் நேற்று (08-05) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி – வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் 33 வயதுடைய வசந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று (08-05) காலை இவ்வாறு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி, தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் றெக்டரில்; சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்

  • May 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று இரவு தனது உழவு இயந்திரத்தின் கீழே இறங்கி நின்றவாறு திறப்பினை இயங்க செய்துள்ளார். இதன்போது கியர் இயக்கத்தில் இருந்த உழவு இயந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்ததால் அவர்மீது உழவு […]

முக்கிய செய்திகள்

இந்தியாவில் பதற்றம் 18 விமான நிலையங்கள் மூடல் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

  • May 7, 2025
  • 0 Comments

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பதற்றத்தை தொடர்ந்து வட இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ் மற்றும் சண்டிகர் உட்பட குறைந்தது 18 விமான நிலையங்கள் இன்று (புதன்கிழமை) […]

உள்ளூர்

மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு

  • May 5, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மன்னார் நகர சபை,மன்னார்,மாந்தை மேற்கு,நானாட்டான், முசலி ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் ஐந்து சபைகளில் 103 சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய 114 […]