உள்ளூர் முக்கிய செய்திகள்

சாணக்கியன் எம்.பியின் தனிநபர் பிரேரணையான மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சபையில் சமர்பிப்பு

  • June 5, 2025
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார். பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் […]

உள்ளூர்

தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்ததா என பரிசீலிக்கப்படும் – டக்ளஸ்

  • June 5, 2025
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் இதனைத் குறிப்பிட்டார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்துக்கு வருகை தந்த சிவஞானம், வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் […]

உள்ளூர்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கேட்டு போராட்டம்!

  • June 5, 2025
  • 0 Comments

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்று செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி ‘செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்’ என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்திக் குழுத் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி

  • June 4, 2025
  • 0 Comments

மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரான மாத்தறையைச் சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை (11-06) மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஓர் சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் சகிதம் இன்று நடைபெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான பல விடயங்கள் காலந்துரையாடப்பட்டுள்ளன.

உள்ளூர்

சில ஊடகங்கள் ஊடக சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதாக நீதியமைச்சர் குற்றச்சாட்டு

  • June 4, 2025
  • 0 Comments

நீங்கள் என்ன சொன்னாலும் எவ்வளவு பிழையான விடயங்களை தெரிவித்தாலும் உங்கள் சகோதரருக்கு பொதுமன்னிப்பு கிடைக்காது என ஊடகமொன்றிற்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார் இலங்கையின் ஊடகமொன்று தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலிற்காக ஊடக சுதந்திரத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார இது குறித்து எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் சில ஊடகங்கள் ஊடகசுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்கின்றன என குறிப்பிட்டுள்ளார். நீங்கள் என்ன சொல்லாலும் உங்கள் சகோதரருக்கு […]

உள்ளூர்

வவுனியா குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

  • June 4, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ‘மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை […]

உள்ளூர்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு!

  • June 3, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி இன்று (03) முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அதனை அடுத்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , […]

உள்ளூர்

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

  • June 3, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் ராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>ஜனாதிபதி அநுரவுக்கு அவசர தந்தி அனுப்பிய டக்ளஸ்! […]

உள்ளூர்

ஜனாதிபதியை சந்தித்த அவுஸ்திரேலிய துணைப் பிரதமர்!

  • June 3, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்புஅமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழல் மற்றும் மோசடியை ஒழிக்க தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் […]

உள்ளூர்

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

  • June 3, 2025
  • 0 Comments

2025.05.06 அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்களால் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்ய அல்லது முறைப்பாடளிக்க எந்தவொரு நபருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 7 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பார்வையிடும் வாய்ப்பு […]