உள்ளூர் முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன் வேலை வேண்டி போராட்டம்

  • June 2, 2025
  • 0 Comments

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போட்டி பரீட்சை நியமனம் வழங்கக் கோரியும், கிழக்கு மாகாண பட்டதாரிகள் அரச நியமனங்களில் புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன் போது, பேச்சுவார்த்தை போதும் தொழிலை தா?,அரச சேவையில் கிழக்கு மாகாணத்தை புறக்கணிப்பது ஏன், பரீட்சை வேண்டாம் தகுதிகான் அடிப்படையில் வேலை போன்ற பல பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூர்

புதிய கொவிட் ஒமிக்ரோன் கண்டுபிடிப்பு – கண்காணிப்பை பலப்படுத்த சுகாதார அதிகாரிகள் முனைப்பு

  • June 2, 2025
  • 0 Comments

இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் துணை வகைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையில் கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதுவும் இல்லை என்ற போதிலும்,அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கின்றது விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் துணை வகைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. புதியமாறுபாடுகள் தோன்றுவது வைரஸ் பரிணாமா வளர்ச்சியின் ஒரு வழக்கமான பகுதியாகும் […]

உள்ளூர்

பேரவையும் சங்கும் சங்கமம், புதிய கூட்டணி ஒப்பந்தம்

  • June 2, 2025
  • 0 Comments

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர். ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் […]

உள்ளூர்

35 இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சியமைப்பதற்கு முயற்சிப்பதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்

  • June 1, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 35இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பதில்பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 377ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் வடக்கு,கிழக்கில் 35சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்பார்ப்புடன் உள்ளது. அண்மைய நாட்களில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது

  • June 1, 2025
  • 0 Comments

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 19 நிர்வாக மாவட்டங்களுக்குரிய உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைஆகியவற்றுக்கான உறுப்பினர் நியமனத்தை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்துள்ளது. (262 ஆம் பிரிவு) உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 66 (2) அத்தியாயத்தின் கீழ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு சனிக்கிழமை (31) பிரசுரித்துள்ளது. பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் நிர்வாக மாவட்டத்தில் உள்ள,ஒவ்வொரு தொகுதிகளுக்காக தெரிவு […]

உள்ளூர்

புதிய கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது!

  • May 31, 2025
  • 0 Comments

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார். நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து வைத்திய ஆராய்ச்சி […]

உள்ளூர்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிக்கை!

  • May 31, 2025
  • 0 Comments

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 274 ஆகவும், லங்கா சூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 325 ஆகவும் உள்ளது. 95 ஒக்டேன் ஒரு லிட்டரின் விலை ரூ. […]

உள்ளூர்

அடுத்த 36 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!

  • May 30, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்தத் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வடமத்திய மாகாணத்திலும், மன்னார் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மனித இறப்புக்கான காரணம் குண்டுதாக்குதல்,சூட்டுக்காயங்கள் என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

  • May 29, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன், காணாமல் போனோர் அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் […]

உள்ளூர்

காற்றாலை மின் உற்பத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர் மன்னார் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

  • May 29, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் நேற்று (27-05) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இக்கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான […]