தமிழின அழிப்பு நினைவகமானது காலத்திற்கேற்ற அறப்பணியென கனேடிய உயர்ஸ்தானிகரிடம் சிறிதரன் எம்.பி. தெரிவித்துள்ளார்
கனடாவின் பிரம்டன் நகரில் ஈழத்தமிழர்களுக்கான இனப்படுகொலை நினைவுத்தூபி நிறுவப்பட்டமை, காலப்பெறுமதி மிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். இதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், கனடிய உயர்ஸ்தானியர் எரிக் வோல்ஷிடம், தமிழர் சார்பில் கனடிய அரசுக்கு நன்றிய்கூறினார். இதுகுறித்து சிறிதரன், புதன்கிழமை (மே 21) கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானியரகத்தில் நடைபெற்ற சந்திப்பில், கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரம்டன் நகர மேயர் பாட்டிரிக் பிரவுனுக்கு எழுதிய நன்றி கடிதத்தையும் உயர்ஸ்தானியரிடம் நேரில் கையளித்தார். […]