உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

  • May 5, 2025
  • 0 Comments

12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது: ‘உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 477 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளன. நடைபெற இருக்கும் உள்ளூர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்திற்கான வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கப்ட்டுள்ளது

  • May 5, 2025
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை உரிய இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை தி. விபுலானந்தா கல்லூரியிலிருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுள்ளன. நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக பொலிஸார் மற்றும் அதிரடி படைகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.  

உள்ளூர்

வவுனியாவில் 154 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள்; அனுப்பிவைக்கப்பட்டது

  • May 5, 2025
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்டச்செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர்

கிளிநொச்சியில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

  • May 5, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேரூந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டன. நாளை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ளு.முரளிதரன் , உதவித் தேர்தல் ஆணையாளர் வே. சிவராசா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  

உள்ளூர்

மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு

  • May 5, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மன்னார் நகர சபை,மன்னார்,மாந்தை மேற்கு,நானாட்டான், முசலி ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் ஐந்து சபைகளில் 103 சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய 114 […]

உள்ளூர்

தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது

  • May 2, 2025
  • 0 Comments

எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் குறித்த சங்க பிரதிநிதிகள் ஊடக சந்திப்பொன்றை நடத்தியபோதே சங்கத்தினர் இதனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி என்பது எமக்கான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னார் மாவட்டத்தில்; மே தினம் கலைவிளையாட்டு நிகழ்வுகளாக மக்கள் கொண்டாடினர்

  • May 1, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இன்று மே தின நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக, மன்னார் வங்காலை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினர். அந்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்கலாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மே தினத்தை கொண்டாடியுள்ளனர். வங்காலை மீனவ சங்கம், மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் வங்காலை விளையாட்டுக் கழகம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலதொடர்பாக 3,828 முறைப்பாடுகள் பதிவு

  • May 1, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி) 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 24 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,563 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 241 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.  

உள்ளூர்

செம்மணி மனிதப் புதைகுழி அடுத்த மாதம் அகழ்வுக்குட்படுத்தப்படுமென சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவிப்பு

  • April 30, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் நேற்று (29-04) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சபையின் பிரதிநிதிகள், சட்டமருத்துவ அதிகாரிகள், பொலிஸார், என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறையிட்ட தரப்புகள் கலந்துகொண்டனர். […]

உள்ளூர்

மன்னாரில் மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு

  • April 29, 2025
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (28-04) மாலை மன்னாரில் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பும் குறித்த நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து […]