பிரதமருக்கும பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை
பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் சந்திப்பு நடத்தினார். இந்நிகழ்வில் சம்பளக் குறைப்புகள், கொடுப்பனவுகள், கூடுதல் நேர ஊதியம், பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் தமது கவலைகளை வெளிப்படுத்தினர். இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் மேலும் விவாதங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.