உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்த காலத்து தாதா மேர்வின் சில்வா மீண்டும் சிறைவாசம்

  • April 21, 2025
  • 0 Comments

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரும் இன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள […]

உள்ளூர்

மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஈஸ்ட்டர் தாக்குதலுக்கு நீதி கோரிய போராட்டத்தில் குதித்தார்

  • April 21, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சந்தியில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியிருந்தனர். இவர்கள் கடந்த பல மாதங்களாக ஒவ்வொரு 21ஆம் திகதியன்றும் இந்த சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தந்தை காலமானார்

  • April 21, 2025
  • 0 Comments

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறியதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய நிலையில் நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந் நிலையில் லைத்தியசாலையிலிருந்து இருப்பிடம் திரும்பிய அவர் ஓய்நிலையில் இருந்த போதே அவர் காலமானார்  

உள்ளூர் முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசாங்கம் அரசியல் இலாபமீட்டுவதற்காக பயன்படுத்துகின்றது – நாமல்

  • April 21, 2025
  • 0 Comments

உள்ளுராட்சி தேர்தலிற்கு முன்பாக அரசியல் இலாபமீட்டுவதற்காக அரசாங்கம் உயிர்த்தஞாயிறு தாக்குதலை பயன்படுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அரசாங்கம் தேசிய துன்பியல் நிகழ்வை உணர்ச்சிபூர்வமான பதில்களை தூண்டவும்,பொதுமக்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் கையாள்கின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவிற்கு ஏற்ப 2021 பெப்பிரவரி 23ம் திகதி நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது என தெரிவித்துள்ள […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு சுயாதீன வழக்குரைஞர் குழு அவசியமென கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

  • April 21, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சுயாதீன வழக்கு விசாரணை அலுவலகம் அவசியம் என போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்காக சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். கொலை செய்யும் கூலிப்படைகள் இல்லாத வெள்ளை வான்கள் இல்லாத சட்டவிரோத தடுப்பு முகாம்கள் இல்லாத புதிய சமூகமொன்றை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு அன்று நிலவிய அரசியல்கலாச்சாரமே […]

இந்தியா உள்ளூர் சினிமா

வீ.ஜே. பிரியங்கா திருகோணமலை மருமகளானார். இரா.சம்பந்தனின் மருமகனை கரம் பிடித்தார்

  • April 20, 2025
  • 0 Comments

பிரபல இந்திய விஜே தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பிரியங்காவின் கணவர் வசி இலங்கையைச் சேர்ந்தவர் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழராவார். இவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர மேலும், இலங்கை வாழ் தமிழர்களிடையே ஆதரவைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாவார். அதுமட்டுமில்லாது, இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி […]

உள்ளூர்

உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

  • April 20, 2025
  • 0 Comments

இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் 40 நாட்கள் தவக் காலத்தில் கிறிஸ்தவர்கள் மதக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் முகமாக இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர். அதற்கமைய, கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில், பிரதான உயிர்த்த ஞாயிறு ஆராதனை நேற்று இரவு நடைபெற்றது. அதேநேரம், நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலயங்களில் நேற்று இரவு விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இன்றும் வழிபாடுகள் நடைபெறவுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

கருணா, பிள்ளையான் கொல்லப்படும் நானே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியடையும் நாளாகும். – ராஜித சேனாரத்ன

  • April 20, 2025
  • 0 Comments

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் அரங்கேற்றியிருக்கும் நாடகமே பிள்ளையானின் கைதாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் சனிக்கிழமை (19-04) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் வெளியேறியதால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்ச்சியடைந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்தவொரு […]

உள்ளூர்

நிகழ்நிலை காப்பு சட்ட மாற்றீடு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

  • April 18, 2025
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை காப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான ஏதேனும் விதிமுறைகள் நடைமுறையிலிருந்தால், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அந்த விதிமுறைகள் அனைத்தும் ரத்தாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் தனிநபர் சட்டமூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியும் அதற்கு உதவியவர்களையும் வெளிப்படுத்துமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்

  • April 17, 2025
  • 0 Comments

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடுரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர் பேரவை இதனை தெரிவித்துள்ளது. 2025ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாகின்றது என தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதிசெய்வதற்காக […]