பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில அரசாங்கம் பொய்யுரைக்கின்றது- உதய கம்மன்பில
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடத்தல் தொடர்பிலேயே தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார், அரசாங்கம் தெரிவிப்பது போல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தடுத்துவைக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் நபர் ஒருவரை கடத்த உதவியது தொடர்பானதே இந்த குற்றச்சாட்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்புகாவல் உத்தரவு எந்த வகையிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் […]