உள்ளூர்

அனுராதபுரத்தில் முஸ்லீம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு கொலையா தற்கொலையா?

  • April 7, 2025
  • 0 Comments

அனுராதபுரம் கெகிராவ பகுதியில் இளம் முஸ்லீம் குடும்பப் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். ஆனால் இவ்வாறு தூக்கிட்டு இறக்க வாய்ப்பே இல்லை எனவும் நீதியான விசரனை வேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர் பொலீஸாரிடம் வலியுறுத்தியுள்ளனர்  

உள்ளூர்

ரணில் கோட்டா அரசில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியினை மட்டக்களப்பிற்கு கொண்டுவந்தேன்- இரா.சாணக்கியன்

  • April 7, 2025
  • 0 Comments

கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51 மில்லியன் ரூபாவினை மட்டுமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் நேற்று (06-04) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மகன் தாயை அடித்தே கொன்றுள்ளான்

  • April 7, 2025
  • 0 Comments

வீட்டு வளாகத்தில் நேற்று (06-04) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகனுடன் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து மகன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உடைந்த துடைப்பம் மற்றும் தடி ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கொலையுடன் தொடர்புடைய […]

உள்ளூர்

நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் – சுகாதார அமைச்சர்

  • April 7, 2025
  • 0 Comments

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சுகாதார தகவல் தொழில்நுட்ப அமைப்பு உத்தியோகபூர்வ திறப்பு மற்றும் மருத்துவமனையின் ஆய்வகத்தின் திசு அறிவியல் துறையின் தரப்படுத்தலை பெறுவதற்காக இடம்பெற்ற நிகழ்வில் பிரதம […]

உள்ளூர்

இலங்கையில் இறங்கினார் இந்தியப் பிரதமர்

  • April 5, 2025
  • 0 Comments

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (4) இரவு 8.33 […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என அன்று அச்சுறுத்திய கட்சி ஜேவிபி என ஐ.தே.கட்சி தெரிவிப்பு

  • April 4, 2025
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என ஆரம்ப காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அச்சுறுத்தியது. மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்டனர். 13ஆவது திருத்தம் தேவையற்றதெனில், நாளையே பாராளுமன்றத்தைக் கூட்டி அதனை இரத்து செய்ய முடியுமல்லவா? அவ்வாறில்லை என்றால் அதனை நீக்குவதாக மக்களுக்கு பொய் வாக்குறுதி அளித்தமைக்காக ஜே.வி.பி. அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வலியுறுத்தினார். ஐ.தே.க.வின் யாழ். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மேர்வின் சில்வாவுக்கு தொடரும் விளக்கமறியல்

  • April 3, 2025
  • 0 Comments

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இஷாரா செவ்வந்தி போல் இருந்ததால் பெண்ணொருவர் கைது

  • April 2, 2025
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட யுவதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஷாரா செவ்வந்தி அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். வடமராட்சி கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எல்லைக்கட்களை நிறுவியுள்ளனர்

  • April 1, 2025
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தங்கள் பிரதேசத்தில் வளங்கள் சூறையாடப்படுவதாகவும் அது தொடர்பாக எந்த தகவல்கள் தெரிந்தாலும் தமக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் எனவும் வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர் இதுதொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தமது அனுமதியுடன் கட்டடங்கள் அமைப்பதற்கு தாம் அனுமதி கொடுப்பதாகவும் குறிப்பாக மருதங்கேணி பருத்தித்துறை வீதியின் ஆற்றங்கரை பக்கம் தாம் எந்த வித அனுமதியும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

  • April 1, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.