உள்ளூர்

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மத்திய வங்கியின் சுயாதீனம் அவசியம் என்கிறார் ஆளுநர் நந்தலால் வீரசிங்க

  • September 1, 2025
  • 0 Comments

மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு உரையில் அவர் பேசியபோது, அரசியல் தலையீடும் சுயாதீனமின்மையும் 2022ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியை உருவாக்கிய முக்கிய காரணிகள் எனக் குறிப்பிட்டார். அந்தக் காலகட்டத்தில் பெரும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ‘பணம் அச்சிடும்’ நடைமுறை பின்பற்றப்பட்டது. இதனால் பணவீக்கம் 70 சதவீதத்திற்கு அருகில் உயர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். விலை நிலைத்தன்மையும் நிலையான பொருளாதார வளர்ச்சியும் உறுதிப்படுத்த, தெளிவான அதிகாரப்பூர்வ பணிக்கூற்று கொண்ட வலுவான மற்றும் சுயாதீன மத்திய வங்கி அவசியம் என அவர் […]

உள்ளூர்

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வீட்டிலிருந்து உணவு அனுமதி

  • September 1, 2025
  • 0 Comments

விளக்கமறியலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் ரஜித சேனரத்னையும் நிமல் லன்சாவையும், அவர்கள் வீட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளை பெற்றுக்கொள்ள சிறைச்சாலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சிறைச்சாலைத்துறை பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்ததாவது, இருவரும் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டதாகும். ரஜித சேனரத்ன அரசு நிதிக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் வருகிற செப்டம்பர் 9 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், 2006 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்றைய எரிபொருள் விலை மாற்றத்தின் பின் விலை நிலைத்திருக்கும் – சிபிசி

  • August 31, 2025
  • 0 Comments

  இலங்கையில் எரிபொருள் விலைகள் இன்று (31-08) நள்ளிரவில் அறிவிக்கப்படவுள்ள மாதாந்திர திருத்தத்திற்குப் பிறகும் மாறாமல் நீடிக்கும் என சிலோன்   பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC)  இயக்குநர் டாக்டர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பு மொத்தத்தில் சுமார் 10 சதவீத குறைப்பு ஏற்பட்டுள்ளதைத் தவிர, எரிபொருள் விலைகளில் பெரிய மாற்றமில்லை. ‘அது குறிப்பிடத்தக்க குறைப்பா என்பதைக் குறித்து நான் முடிவு செய்ய முடியாது,’ எனவும் குறிப்பிட்டார். இலங்கை தற்போது உலக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கெதிராகவே தொழில்சங்க போராட்டம்- சம்பத் பிரேமரத்ன

  • August 29, 2025
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபையின் (ளுடுவுடீ) சில தொழிற்சங்கங்கள் தங்களது நான்கு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தன. முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜனபலவேகயாவுடன் இணைந்துள்ள ளுடுவுடீ ‘சமகி தலைவரான நிரோஷன் சம்பத் பிரேமரத்னே, அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் (Nவுஊ) தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக, அரச மற்றும் தனியார் பஸ்களுக்கு ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அவர்களின் எதிர்ப்புக்குரிய முக்கிய காரணமாகும். இதுகுறித்து தனியார் பேருந்து […]

உள்ளூர்

இன, மத அடிப்படையிலான கட்சியாக அரசியல் கட்சிகள் பதிவதற்கு தடை- தேர்தல் ஆணைக்குழு

  • August 28, 2025
  • 0 Comments

தேர்தல் ஆணைக்குழு இன அல்லது மத நோக்கங்களுடன் புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஊடகங்களிடம் கூறியதாவது: ‘அரசியல் கட்சிகள் பதிவு செய்யும் போது, அவை இன அல்லது மத அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பதை நாங்கள் பரிசோதிக்கிறோம். இதற்கு உரிய சட்டப் பிரிவுகள் உள்ளன. சந்தேகம் இருந்தால் அவற்றின் படி நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியல் […]

உள்ளூர்

ரணிலுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என ஆராய சஜித் தலைமையில் கட்சி கூடுகின்றது

  • August 25, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிக ஆதரவு வழங்குவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று கூட்டம் நடத்தவுள்ளது. தற்போது அவர் விளக்கமறியலில் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து கைது நடவடிக்கையை கண்டித்து வருகின்றன. நேற்று (24) கொழும்பில் பல கட்சிகள் ஒன்று கூடி, விக்கிரமசிங்க கைது ‘ஜனநாயக விரோத செயல்’ மற்றும் ‘அரசியல் பழிவாங்கல்’ என்று விமர்சித்தன. எனினும், சஜித் பிரேமதாசா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரா அந்த ஊடகச் சந்திப்பில் […]

உள்ளூர்

அநுர அரசின் அசமந்த போக்கினால் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

  • August 25, 2025
  • 0 Comments

மருத்துவர்களின் இடமாற்றத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய அபாய நிலை காரணமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவுகள், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக நோய் பிரிவுகள், இராணுவ வைத்தியசாலை, தேசிய மனநல வைத்திய நிறுவனம் போன்ற முக்கிய பிரிவுகளின் சேவைகள் இடையூறு இன்றிப் செயற்;படும் என சங்கம் அறிவித்துள்ளது. அரச மருத்துவ […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  • August 23, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டன் பயணம் மேற்கொள்வதற்காக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சாட்டிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (22-08) அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

உள்ளூர்

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம்

  • August 19, 2025
  • 0 Comments

பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலிகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம் பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் […]

உள்ளூர்

இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் : அரசியலமைப்பு விவகாரமே உள்வாங்கப்பட்டுள்ளது

  • August 17, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஒன்றை பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன. இதில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், மேலும் 13ஆவது திருத்தத்தின்படி மாகாணசபைத் தேர்தல்களை காலந்தாழ்த்தாமல் விரைந்து நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்பே அளித்த வாக்குறுதிகளுக்கிணங்க, அரசியலமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் […]