யாழ் நல்லூர் ஆலய பின் வீதி பகுதியில் வாள்வெட்டு : இளைஞன் காயம், ஐவர் கைது
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் உள்ள வீதி தடைக்கு அருகில் நேற்று (16-08) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. நல்லூர் ஆலய கார்த்திகை திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு திரண்டிருந்தனர். இவ்வேளையில், கும்பல் ஒன்று வீதி தடைக்கு அருகிலுள்ள அரசடி பகுதியில், மக்கள் கூட்டம் மத்தியில் இளைஞன் ஒருவரை குறிவைத்து வாள்வெட்டு தாக்குதலை நடத்தியது. […]