செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 43 பொருட்களை மக்கள் பார்வையிட்டனர்
இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்ட வளாகத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 54 பிற பொருட்களில் 43 பொருட்கள் 2025 ஆகஸ்ட் 5 பிற்பகல் பொதுமக்களுக்கு, குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமையுடன் காட்டப்பட்டன. இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இதில் பங்கேற்றும், 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடிய தங்கள் உறவினர்களின் எந்தப் பொருளையும் அடையாளம் […]