அரசு வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை – சிகிச்சை சேவைகள் கடுமையாக பாதிப்பு
அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தீவிர பற்றாக்குறை நிலவி வருவதால், நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, மருந்துப் பற்றாக்குறைக்கு மாற்றுத் தீர்வாக அறிவிக்கப்பட்டுள்ள வெளியிடங்களில் மருந்து கொள்வனவுக்கான முறைகள் குறித்து சுகாதார அமைச்சு தெளிவான வழிகாட்டல்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். வைத்தியர்கள் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் சிகிச்சை சேவைகளை […]