மகனின் மர்மமறியாது மரணித்த மற்றொரு அம்மா
வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தனது புதல்வருக்கு நேர்ந்த கதி என்னவென்பதை வெளிப்படுத்தக் கோரி சுமார் எட்டு வருடங்களாகப் போராடிய மற்றுமொரு தமிழ்த் தாய் பதில் தெரியாமலேயே உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைக் கண்டுபிடிக்க சுமார் 3,000 நாட்கள் போராட்ட களத்தை ஆக்கிரமித்த ‘மாரியம்மா’ என அழைக்கப்படும் வேலுசாமி மாரி, தனது 79ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (24-02-2025) காலமானார். வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த தாயின் புதல்வரான வேலுசாமி சிவகுமார், கடந்த […]
