முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் வீடொன்றின்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

  • February 18, 2025
  • 0 Comments

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (17-02-2025) இரவு இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த வீட்டில் யாரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டின் உரிமையாளரைப் பழிவாங்கும் நோக்கில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் வீட்டின் சில பகுதிகள் பாதிப்படைந்துள்ளது இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

இந்தியா

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஸ் குமார் நியமனம்

  • February 18, 2025
  • 0 Comments

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (பிப்ரவரி 18-ம் தேதி) ஒய்வு பெறுகிறார். இதனால், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை பொறுத்தவரை பிரதமர் முன்மொழியும் ஒருவரை ஜனாதிபதி நியமனம் செய்து வந்தார். தேர்தல் ஆணையர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, பிரதமர் தலைமையில் மூன்று பேர் […]

இந்தியா

ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்தார்

  • February 17, 2025
  • 0 Comments

தலைநகர் டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கிடையே, டெல்லியில் பா.ஜ.க. பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுவிட்டு திரும்பி உள்ளார். இந்நிலையில், டெல்லி ராஸ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளாhர்

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 67 வயதுடைய பெண் உயிரிழப்பு!

  • February 17, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்போது விடத்தல்பளை, மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நடராசலிங்கம் புஸ்பராணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த பெண் கடந்த 08 – 11ஆம் திகதி வரை காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 11ஆம் திகதி சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் […]

இந்தியா முக்கிய செய்திகள்

சீறியெழும் சீமான் விஜய்க்கு ஏன் Y பிரிவு பாதுகாப்பு

  • February 16, 2025
  • 0 Comments

குறிப்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. நான் தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தலை மாற்றிவிட்டனர். மானுடத்தை கொன்றுவிட்டு மதத்தை தூக்கி நிறுத்துவதா? கைக்கூலி, ஓட்டுப்பிச்சை என்று கூறுவதா?, ஆதாயம் இருக்கமானால் எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள். அனைவரும் […]

முக்கிய செய்திகள்

வடமாகாணத்திற்கு இரவு தபால் தொடரூந்து சேவை இன்று தொடக்கம் ஆரம்பம்

  • February 14, 2025
  • 0 Comments

வடக்குக்கான இரவு தபால் தொடரூந்து; சேவை இன்று முதல் மொரட்டுவை தொடரூந்து; நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தியா

காவல் உதவி செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டுமென ஆவடி போலீஸ் கமிசனர் சங்கர் வேண்டுகோள்

  • February 13, 2025
  • 0 Comments

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பூந்தமல்லி பஸ்நிலையத்தில் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து மாணவிகள் பெண்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில் ஆவடி போலீஸ் கமிசனர் சங்கர் கலந்து கொண்டு பெண்களிடையே காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு […]

முக்கிய செய்திகள்

காற்றாலை மின்திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது

  • February 13, 2025
  • 0 Comments

இலங்கையில் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த காற்றலை மின்திட்டத்திலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி குழுமம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மீள்சக்தி காற்றாலை திட்டம் உட்பட இலங்கையில் முன்னெடுக்கவிருந்த திட்டங்களில் மேலும் ஈடுபடுவதிலிருந்து விலகும் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தை அதானி கிறீன் எனேர்ஜி கௌரவமான விதத்தில் அறிவித்துள்ளது. அதானி குழுமம் நாங்கள் இலங்கை குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம், இலங்கை அரசாங்கம் விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்புகளிற்கு தயாராக உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது  

உலகம்

சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் டிரம்ப் இன் நடவடிக்கைகளுக்கு போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார்

  • February 12, 2025
  • 0 Comments

மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அமெரிக்காவிற்குள் செல்கின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அமெரிக்க அரசு அனுப்பி வருகிறது. இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் […]

முக்கிய செய்திகள்

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி தீக்கிரையாக்கப்பட்ட போது கூட நாட்டில் மின்துண்டிக்கப்படவில்லை குரங்கு சேட்டைகள் வேண்டாம் ;- எதிர்க்கட்சி எச்சரிக்கை

  • February 12, 2025
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்றவும் முற்பட வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று (11-02-2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். அவர் மேலும் […]