முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் ஜப்பானியத் தூதுவர் நேரில் பார்வையிட்டார்

  • February 11, 2025
  • 0 Comments

ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (யுமழை ஐளழஅயவய) தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (யுமழை ஐளழஅயவய) தூதரக அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை முகமாலைப்பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் நிறுவவனப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டுள்ளார். அந்தப் பகுதியில் வெடிபொருட்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் இந்தப்பகுதியில் மீள் […]

இந்தியா

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்- மம்தா

  • February 11, 2025
  • 0 Comments

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் பேசும்போது, ‘டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. அரியானாவில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. வென்று விட்டது. எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் இல்லை. […]

இந்தியா

பெங்களூருவில் இன்று சர்வதேச விமான கண்காட்சி ஆரம்பமாகின்றது

  • February 10, 2025
  • 0 Comments

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற இருக்கிறது. 10-ம் தேதி தொடங்கும் விமான கண்காட்சி 14-ம் தேதி வரை என 5 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது. விமான கண்காட்சி நடைபெறும் […]

இந்தியா முக்கிய செய்திகள்

திருப்பதியின் மாட்டு கொழுப்பு லட்டு விவகாரத்தில் சி.பி.ஐ. 4 பேரை கைது செய்தது

  • February 10, 2025
  • 0 Comments

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் புதிய சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டது அதன்படி, சி.பி.ஐ. கடந்த ஆண்டு அக்டோபரில் 5 பேர் கொண்ட சிறப்பு குழுவை […]

இந்தியா முக்கிய செய்திகள்

இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி படுதோல்வி

  • February 8, 2025
  • 0 Comments

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற்றது. இதில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் தாக்குதல்

  • February 8, 2025
  • 0 Comments

வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (07-02-2025 ) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் ஒருவருக்கும், கீழ் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழர் பகுதியில் பாடசாலை மாணவன் […]

முக்கிய செய்திகள்

ரஸ்ய இராணுவத்தில் விரும்பி இணைந்து கொண்ட இலங்கையர்களில் 56 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்- வெளிவிவகார அமைச்சர்

  • February 7, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு ரஸ்ய தூதரக தகவல்களை அடிப்படையாக கொண்டு பதிலளிக்கையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை பணியகம் போன்றவற்றிற்கு கிடைத்துள்ள தகவல்களின்படி உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்காக 554 இலங்கையர்களை ரஸ்யா சேர்த்துக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள விஜித ஹேரத் எவரையும் ரஸ்யா பலவந்தமாக சேர்த்துக்கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 2025 ஜனவரி 20 ம் திகதி வரை 59 இலங்கையர்கள் ரஸ்ய உக்ரைன் […]

இந்தியா

ஆழமான கழிவு வடிகாலில் விழுந்த 2 வயது குழந்தை சடலமாக மீட்பு

  • February 7, 2025
  • 0 Comments

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் வைரவ் கிராமத்தில் உள்ள ஒரு பாதாள சாக்கடையில் 2 வயது ஆண் குழந்தை விழுந்ததாக போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புக் குழுவினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் சுமார் 60 முதல் 70 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கனரக வாகனம் ஒன்று ஏறி இறங்கியதால் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்தது. இதனால் இந்த சம்பவம் நிகழ்ந்தது […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் மோட்டார் வண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது

  • February 7, 2025
  • 0 Comments

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை (6) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா மகாவித்தியாலயத்தை அண்மித்து நிறுத்திவிட்டு, மீண்டும் புறப்பட தயாரான போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீயை கட்டுப்படுத்த மோட்டர் சைக்கிள் சாரதி மற்றும் வீதியால் சென்றோர் முயன்ற போதும் மோட்டர் சைக்கிள் பகுதியளவில் எரிந்து நாசமாகிய […]

உலகம்

நைஜீரிய பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி

  • February 6, 2025
  • 0 Comments

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்தது. இது அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி பள்ளிக்கூடத்தையும் தாக்கியது. இரவு நேரமானதால், குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்ததால் தீப்பிடித்தது தெரியவில்லை. இதனால் தீயில் கருகி 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து தீயணைப்புப் […]