முக்கிய செய்திகள்

ஜனாதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சிக்கு பயணம்

  • February 6, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு உலக உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி […]

இந்தியா முக்கிய செய்திகள்

ராகுல் காந்தி பொய்யுரைப்பதால் இந்தியாவுக்கு வெளிநாட்டில் மரியாதை குறையும்- ஜெய்சங்கர்

  • February 4, 2025
  • 0 Comments

பாராளுமன்ற வரவு செலவு திட்ட கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்காக பாராளுமன்றம் நேற்று (03-02-2025) கூடியது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார் அப்போது அவர், ‘இந்தியாவும் உற்பத்தியில் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தால், […]

முக்கிய செய்திகள்

சிறைசாலை கைதிகளை உறவினர்கள் பார்ப்பதற்கு விசேட அனுமதி – சிறைச்சாலை ஆணையாளர்

  • February 3, 2025
  • 0 Comments

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை காண உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளை ; 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட உள்ளது. அதற்கமைய உரிய பாதுகாப்புகளுடன் திறந்த முறையில் சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாகவே கைதிகளை காண அனுமதி […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

  • February 2, 2025
  • 0 Comments

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சத்துரங்க ஹேரத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் சுகாதார சீர்கேட்டால் சிசு மரண வீதம்,எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு- கபில ஜயரத்தன

  • February 1, 2025
  • 0 Comments

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளது. வருடம் தோறும் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழந்து வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் கபில ஜயரத்தன தெரிவித்தார். இலங்கை மருத்துவ சங்கத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது. இதன்போது வைத்தியர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ள அதே வேளை வருடாந்தம் […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவை எழிற்சியூட்டுகிறார்

  • January 29, 2025
  • 0 Comments

கடந்த கால கசப்புக்களை மறந்து மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர்) உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (27) கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் […]

உலகம்

காங்கோ நாட்டின் சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்

  • January 29, 2025
  • 0 Comments

கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது சிறை காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் […]

இந்தியா

இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது

  • January 28, 2025
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டமைக்கு இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது யுhழ்ப்பாணத்தின் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை இன்று (28) அதிகாலை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர் இதன்போது இரண்டு மீனர்வர்கள் படுகாயமடைந்த அதேவேளை மூவருக்கு சிறு காயங்களும் ஏற்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்திய துணைத்தூதவர் […]

முக்கிய செய்திகள்

ரஸ்சிய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விரைவில் மீட்க நடவடிக்கையெடுக்கப்படும்- ரஸ்சிய தூதுவர்

  • January 28, 2025
  • 0 Comments

பயண முகவர்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு முயன்று ரஸ்சிய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்பதாக இலங்கைக்கான ரஸ்சிய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடத்தில் உறுதியளித்துள்ளார் இலங்கைக்கான ரஸ்சிய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனுக்கும், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையிலான உத்தியோக பூர்வமான சந்திப்பொன்று நேற்று (27) கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற […]

முக்கிய செய்திகள்

சிவப்பு அரிசி மற்றும் தேங்காய் விலை தொடர்பில் என்ன நடைபெறுகின்றதென பொறுத்திருந்து பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

  • January 27, 2025
  • 0 Comments

காலி, கட்டுஹெம்பலாவில் உள்ள மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் வீட்டிற்கு நேற்று (26) காலை சென்றிருந்த போதே அவர் மேலுள்ளவாறு தெரிவித்துள்ளார். அங்கு மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்போது சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு குறித்து கவலைகளை தெரிவித்ததோடு, ஒரு தேங்காய் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரணில் இவ்வாறு தெரிவித்த போது கடந்த முறை 10 கிலோ சிவப்பு அரிசியை வழங்கியவர் […]