உலகம்

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

  • January 27, 2025
  • 0 Comments

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் பிப்ரவரி 18, 2025 வரை தொடர்ந்து அமலில் இருக்கும்’ என்று வெள்ளை மாளிகை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் […]

முக்கிய செய்திகள்

வடகிழக்கு மாகாணங்கள் சீரற்ற வானிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

  • January 26, 2025
  • 0 Comments

கடந்த 13ஆம் திகதி தொடக்கம் நிலவும் மோசமான வானிலையால் இதுவரை 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலையானது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் தொடர் மழையால் கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பாதிக்கப்பட்டனர். அத்துடன் வட மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா […]

முக்கிய செய்திகள்

வடக்கிலும் கிழக்கின் மட்டக்களப்பு, திருகோணமலையிலும் மழை பெய்யும் சாத்தியம்

  • January 25, 2025
  • 0 Comments

இன்றைய (25-01-2025) வானிலை ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியாக 2020-ம் ஆண்டில் டிரம்ப் தெரிவாகியிருந்தால் உக்ரைன் போர் நடந்திராது – ரஸ்சிய ஜனாதிபதி

  • January 25, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார். அவர் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். உக்ரைன் மீதான ரஸ்சியாவின் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் டிரம்ப், ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தப் போர் ஏற்பட்டிருக்காது. இந்த அபத்தமான போரை உடனடியாக நிறுத்தவேண்டும். உடனடியாக […]

முக்கிய செய்திகள்

அதானியின் காற்றாலை மின்திட்டம் ரத்து- அமைச்சரவை தீர்மானம்

  • January 24, 2025
  • 0 Comments

மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் ஜுன் மாதம் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்து செய்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த திட்டத்திற்கான அனுமதியை இரத்துசெய்வதற்கு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்திற்கு இலங்கையில் எதிர்ப்புகள் உருவானதுடன் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

கொழும்பில் துப்பாகி சூடு நடத்தி கசிப்பை பிடித்த பொலிஸார்

  • January 24, 2025
  • 0 Comments

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது. அதற்கமைய, நேற்றிரவு பொலிஸாரின் உத்தரவை மீறி காரொன்று பயணித்துள்ளது அதனையடுத்து வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் மாளிகாவத்தை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உலகம் வினோத உலகம்

சில மிருகங்களினது எச்சங்கள் அல்லது கழிவு மிகவும் பெறுமதியானது

  • January 24, 2025
  • 0 Comments

திமிலங்கிலத்தின் எச்சம் அம்பர் என அழைக்கப்படுகின்றது. ஒரு கிலோ அம்பர் 3 கோடி வரை விலை போகக்கூடியது. இது மருத்துவ பயன்பாட்டிற்கும் வாசனை திரவியமாகவும் பயன்படுகிறது. பூனைகளின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றது லூவா கோப்பி கொட்டைகள். இந்த காப்பிக் கொட்டைகளின் விலை ஒரு கிலோ 75,000 ரூபாய். யானையின் லத்தியிலிருந்து தயாரிக்கப்படும் பிளாக் ஐவரி கோப்பி என்கின்ற கோப்பி மிகவும் விலை உயர்ந்ததாகும் புனுகு பூனை என ஒருவகை பூனையுண்டு அதன் விந்திலிருந்து வாசனை திரவியம் உற்பத்தி […]

முக்கிய செய்திகள்

வடக்கில் சிறிய அளவிலும் அம்பாறை , மட்டக்களப்பில் இடைக்கிடையும் மழை பெய்யும் சாத்தியம்

  • January 24, 2025
  • 0 Comments

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வுகூறியுள்ளார் இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய […]

முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற எம்பிகளுக்கான உணவு விலையை 450 இருந்து 2000 ரூபாவாக உயர்த்த தீர்மானம்

  • January 24, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற பராமரிப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின்படி, எம்.பியொருவரின் காலை உணவிற்கு 600 ரூபாவும், மதிய உணவிற்கு 1300 ரூபாவும், மாலை தேநீருக்கு 100 ரூபாவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பராமரிப்புக் குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னய […]

முக்கிய செய்திகள்

அம்பாறை ,மட்டக்களப்பில் அடிக்கடியும் வடக்கு, திருமலையில் இடைக்கிடையும் மழை

  • January 23, 2025
  • 0 Comments

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வு கூறியுள்ளார் இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் […]