உள்ளூர் முக்கிய செய்திகள்

அதானி ஒப்பந்த வழக்கினை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது

  • January 16, 2025
  • 0 Comments

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வலுவற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவு பிறப்பித்தது. குறித்த மனுவை இலங்கை பசுமை அமைப்பின் தலைவர் சந்திம அபயவர்தன சமர்ப்பித்தார். இந்த மனுவை இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.யூ.பி. கரலியத்தவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்பான பல […]

முக்கிய செய்திகள்

சிறீதரன் எம்.பி. ஸ்டாலினுடன் கதைத்து வடக்கு மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் – யாழ். மீனவர் அமைப்பு

  • January 16, 2025
  • 0 Comments

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் அவரது செயற்பாடுகளை வரவேற்கின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார். இன்றையதினம் சம்மேளனத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

35 கிலோ கிராம் கஞ்சாவுடன் சிக்கிய காத்தான்குடி இளைஞன்!

  • January 14, 2025
  • 0 Comments

நீர்கொழும்பு புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏத்துகால பகுதியில் பாரியளவான கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேகநபரிடமிருந்து சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான 35 கிலோ 565 கிராம் கஞ்சா தொகை கைப்பற்றப்படுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரைத் தவிர, சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில், கஞ்சா வியாபாரத்தை நடத்துவதற்காக வாடகைக்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வளிமண்டளவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!

  • January 14, 2025
  • 0 Comments

அடுத்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, குருநாகல் மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>இலங்கையில் […]

முக்கிய செய்திகள்

வீட்டில் பொங்காமல் மனதுக்குள் பொங்கியழுத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

  • January 14, 2025
  • 0 Comments

அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராக உள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொங்கல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வடக்கு கிழக்கில் […]

முக்கிய செய்திகள்

அநுர அரசு உள்ளுராட்சிமன்றத் தேரத்தலை பிற்போட முடியாது – மஹிந்த தேசப்பிரிய

  • January 13, 2025
  • 0 Comments

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து, […]

முக்கிய செய்திகள்

முஸ்லீம் மாணவி கடத்தப்பட்ட போது காப்பாற்ற முனைந்த இளைஞர் காயம் –

  • January 13, 2025
  • 0 Comments

கண்டி தவுலாஹல பகுதியில் கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞர் காயமடைந்துள்ளார். மாணவி கடத்தப்பட்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற இந்த இளைஞர் அந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், ‘நான் அந்த வாகனத்துக்குள் ஓரளவு ஏறிவிட்டேன். அந்த மாணவியை விடுவிக்க முயன்றேன். வாகனத்தில் மூவர் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து வாகனத்தை செலுத்தினார்கள். என்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர். நான் வீதியில் விழுந்தேன். அவ்வேளை தலை, கை, காலில் காயங்கள் ஏற்பட்டன’ என அவர் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை […]

உள்ளூர்

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு!

  • January 13, 2025
  • 0 Comments

மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (12) மாலை 4.45 மணியளவில் நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். கருவாடை வாங்க விரும்புவதாகக் கூறிய நிலையில, வாயில் காதவை திறந்தபோது இந்த துப்பாக்கிச் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை!

  • January 12, 2025
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார். உளுந்து அறுவடை தொடர்பில் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2024-2025 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியா மாவட்டத்தில் உளுந்து செய்கை பண்ணப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வானிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

  • January 12, 2025
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நாளைய தினம் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்வதற்கு போதுமான முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்குமாறு,வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது. இதையும் படியுங்கள்>தந்தை செல்வாவின் நினைவுச்சதுக்கம் […]