உள்ளூர்

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி நுவரெலியாவில் வெடித்த போராட்டம்!

  • January 10, 2025
  • 0 Comments

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10.01.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அக்கரப்பத்தனை, மன்றாசி நகர வர்த்தகர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, நகர வர்த்தகர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை […]

முக்கிய செய்திகள்

ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என தமிழர் தரப்பு கோரிக்கை

  • January 9, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகட்த்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று (9) முன்னெடுக்கப்பட்டது. கையில் பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்பு போராட்டம் நடத்தப்பட்டது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள்,மனித உரிமை பாதுகாவலர்கள் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து […]

முக்கிய செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

  • January 9, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் தேர்தல்கள் தொடர்பான சட்டமூலத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்திம அபேரத்ன, முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பித்தார். பாராளுமன்றத்தில் (09) நடைபெற்ற அமர்வின் போது சட்டமூல சமர்ப்பண முன்னறிவித்தலின் போது சட்டமூலத்தை சமர்ப்பித்தார். குறித்த சில உள்ளூர் அதிகார சபைகளின் தேர்தல்கள் கோரப்பட்டு பிற்போடப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பில் புதிய நியமனப்பத்திரங்களைக் கோருவதற்காகவும், தேர்தல்களை நடாத்துவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புப்பட்ட அல்லது அதன் […]

முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபையிலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை

  • January 9, 2025
  • 0 Comments

; யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது பாராளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் உங்கள் அலுவலகம் அறிவித்தது போல இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த விவகாரத்திற்கு […]

உலகம்

நேபாளத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • January 7, 2025
  • 0 Comments

நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. {{CODE1}} நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில் இதனை தொடர்ந்துஇ இந்தியாவின் புதுடில்லிஇ […]

உள்ளூர்

யாழில் தவற விடப்பட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை கட்டிவைத்து தாக்கிய கும்பல்.!!!

  • January 6, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவர் கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழுவொன்று அவரை கட்டிவைத்து தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அத்தோடு, தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், ‘உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில் நிலத்தில் தங்க நகை போன்ற ஆபரணம் இருப்பதை அவதானித்தேன். […]

உள்ளூர்

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது!

  • January 6, 2025
  • 0 Comments

அம்பாறை தமன வனகமுவ பிரதேசத்தில் தொலைபேசி விற்பனை செய்யும் இடம் என்ற போர்வையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையமாக இயங்கி வந்த வீடொன்று நேற்று (5) அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டு மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் 29, 20 மற்றும் 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். போலி நாணயத்தாள்களை அச்சடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி உட்பட பல உபகரணங்கள் பொலிஸாரால் […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)29.12.2024

  • December 30, 2024
  • 0 Comments

சீனாவிடம் என்ன கோரிக்கை வைப்பது அநுர தீவிர ஆலோசனையில் சீனா சகோதர பாசத்தை திருகோணமலையில் வெளிப்படுத்தியது மியன்மார் அகதிகளை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழுக்கு அனுமதி மறுப்பு பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா ஓய்வு பெறுகிறார் அரச அதிகாரிகளோட போராட வேண்டியுள்ளது அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கவலை https://youtu.be/o3y03limmaE

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)28.12.2024

  • December 29, 2024
  • 0 Comments

தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் தெரிவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுபாப்பை இறுக்கும் ஜனாதிபதி இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு ஆளுநரை சந்தித்து வடக்கு கல்விப்புலம் தொடர்பில் கலந்துரையாடினர். வவுனியாவில் அரசியல் கைதிகளுக்காக கையெழுத்துப் போராட்டம் சிவமோகன் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட பலர் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கம் இலங்கை இந்திய மீனவர் பிரச்சனைகளை தீர்க்க முயல்வேன்- – அர்ச்சுனா https://youtu.be/tHDDEGA_eno

இந்தியா

அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார் – திருமாவளவன்

  • December 27, 2024
  • 0 Comments

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆதங்கத்துடன் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெள்ளிக்கிழமை (27) காலை 10 மணிக்கு அவரது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது’ என அவர்அறிவித்துள்ளார். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி […]